உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இது உங்கள் இடம் / காலத்தை வெல்ல கல்வெட்டு தேவையில்லை!

காலத்தை வெல்ல கல்வெட்டு தேவையில்லை!

கோதை ஜெயராமன், சென்னையில் இருந்து எழுதுகிறார்: தமிழகம், சென்னை மாகாணமாக இருந்தபோது, 1952-ல் முதல்வராக இருந்த ராஜாஜியால், சென்னையின்பல்வேறு பகுதிகள் மேம்படுத்தப்பட்டன. அப்படி உருவான ஒரு பகுதிக்கு, ராஜாஜியின்பெயரை வைக்க நினைத்த அதிகாரிகள், முதல்வரை சந்தித்து, அதற்கு ஒப்புதல் கேட்டனர். அதற்கு, 'என் பெயரை எதற்கு வைக்க வேண்டும்? சுத்த அபத்தமாக இருக்கிறதே...வேறு பெயரே உங்களுக்கு தோன்றவில்லையா?' என கடிந்து கொண்டார், ராஜாஜி. அதிகாரிகளும், 'நீங்களே ஒரு பெயரை சொல்லுங்கள்' என்று கேட்டபோது, அந்த ஆண்டின் தமிழ் பெயரான 'நந்தன' என்பதையே அப்பகுதிக்கு வைத்தார். அப்படி உருவானது தான், சென்னை நந்தனம்!அதேபோன்று, காமராஜர் காலத்தில், மதியஉணவு, சாலைகள், அரசு கட்டடங்கள், பஸ்நிலையங்கள், பல்கலை கழகங்கள், நீர் தேக்கங்கள் என, எந்தவொரு அரசு திட்டங்களுக்கும், கட்டடங்களுக்கும் தன் பெயரைவைத்து அழகு பார்க்கவில்லை, காமராஜர். அதனால் தான், அவர் மக்கள் தலைவர் ஆனார். காலம் கடந்தும் அவரது புகழ், மக்கள் மனங்களில் நிலைத்து நிற்கிறது. ஆனால், கருணாநிதி தமிழக முதல்வராக இருந்தபோது, கே.கே.நகர் என்று, தன் பெயரின் முன்னெழுத்துக்களையே ஒரு பகுதிக்கு சூட்டினார். அத்துடன், பல தெருக்கள் திடீர் திடீரென, கலைஞர் கருணாநிதி என்று பெயர் மாற்றம் கண்டன. தற்போது, பேருந்து நிலையம், நுாலகம்,மருத்துவமனை, பெண்களுக்கான உரிமைத்தொகை என, பல அரசு திட்டங்களுக்கு, கருணாநிதி பெயரைச் சூட்டி முதல்வரும், துணை முதல்வரும் அழகு பார்க்கின்றனர்.நாட்டுக்காக, மக்களுக்காக உழைத்து, உயிர் நீத்த தலைவர்கள் தமிழகத்தில் யாரும் இல்லையா... இல்லை அரசு திட்டங்களுக்கு பெயர் வைக்கும் அளவிற்கு அவர்களுக்கு தகுதி இல்லையா?இப்படித்தான், உ.பி.,யில் மாயாவதி முதல்வராக இருந்தபோது, காணும் திசை எங்கும் தன் சிலையை அமைத்தும், பெயரைவைத்தும் ஆனந்தம் கொண்டிருந்தார். கடைசியில் என்னவாயிற்று... அடுத்து வந்ததேர்தலில் ஆட்சியை இழந்தார். தற்போது, உ.பி., அரசியலில் அவர் ஒரு செல்லாக் காசு! காலம், காட்டாறு போன்றது; எல்லாவற்றையும் அடையாளம் தெரியாமல்அடித்து துாக்கி விடும். அதனால், காலத்தை வென்று நிற்க, கல்வெட்டுகளும், பெயர் பலகைகளும் தேவையில்லை;மக்கள் மீது உண்மையான அன்பும், நேர்மையான ஆட்சியுமே தேவை!

கை து செய்யாதது ஏன்?

எம்.கலைவாணி, அருப்புக்கோட்டையிலிருந்து அனுப்பிய,'இ - மெயில்' கடிதம்: இசை வாணி என்ற கானா பாடகி அய்யப்பனைக் குறித்து,மேடையில், 'ஐ அம் சாரி அய்யப்பா, நான் உள்ள வந்தா என்னப்பா, பயம் காட்டி அடக்கி வைக்க பழைய காலம் இல்லப்பா'என்று, மிரட்டும் தொனியில், தரக்குறைவாக பாடிஉள்ளார். கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்த இப்பெண்ணுக்கு ஹிந்துக் கடவுளை கொச்சைப்படுத்தி பாடும் துணிச்சல் எங்கிருந்து வந்தது?இங்குள்ள மதவெறி பிடித்த சில பாதிரியார்களும்,ஹிந்து மத எதிர்ப்பாளர்களும், இயக்குனர் பா.ரஞ்சித்போன்ற பிரிவினைவாத சினிமாக்காரர்களும் தான், இசைவாணி போன்ற அரைவேக்காடுகள் உருவாகக் காரணம். இந்த மூடமதியாளர்களுக்கு ஹிந்து மதத்தின் சாரம் தெரியுமா இல்லை அதன் தர்மம் பற்றி தான் தெரியுமா? தமிழகத்தில் ஈ.வெ.ரா.,வையோ, கருணாநிதியையோஎவராவது தவறாக பேசிவிட்டால், அவர்கள் நாட்டின் எந்த மூலைக்குச்சென்றாலும், துரத்திப் பிடித்து ஜெயிலில் போடும் திராவிட மாடல் அரசு, ஹிந்து கடவுளை இவ்வளவு கீழ்த்தரமாக விமர்ச்சித்துள்ள நிலையில்,அவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? கர்மாவைப் பற்றி பேசியமகாவிஷ்ணுவை, மாற்றுத்திறனாளியின் மனதை புண்படுத்தி விட்டதாக கூறி,அவரை ஏர்போர்ட்டில் வைத்து கைது செய்த திராவிட மாடல் அரசுக்கு, இசைவாணியை கைது செய்ய முடியவில்லையா அல்லது கைது செய்தால், சிறுபான்மை யினர் ஓட்டுப்பிச்சை அளிக்க மாட்டார்கள்என்ற பயமா? ஹிந்துக்கள் ஓட்டு இல்லை என்றால், இந்த அதிகாரம் எல்லாம் உங்களுக்கு எட்டாக் கனி என்பதை, ஆள்வோர் புரிந்து கொள்ள வேண்டும். ரஞ்சித் போன்ற இயக்குனர்கள், தலித் மக்களைப் பாதுகாக்க அவதாரம் எடுத்திருக்கும்இறைதுாதர்களைப் போல,தங்களை பாவித்து, சமூகத் தில் ஜாதிய வன்மத்தை துாண்டும் வகையில் பேசியும், திரைப்படங்களில்கருத்துகளையும் திணித்து வருகின்றனர். இக்கூட்டத்தைச் சேர்ந்தவர்தான், இசைவாணி என்ற ஹிந்து பெயருக்குள்ஒளிந்திருக்கும், மாற்று மதத்தை சேர்ந்த, 'களை'வாணி! 'ஹிந்துக்களுக்கு எதி ரானது அல்ல, திராவிடல்மாடல் அரசு' என்று சொல்லும் ஆட்சியாளர்கள்,ஹிந்துக்களின் மனதை புண்படுத்தியிருக்கும் இசைவாணியையும், அவரை ஏவி விட்ட ரஞ்சித்தையும் எப்போது கைது செய்வர்? 

ஆசிரி யர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்!

அ.குணசேகரன், வழக்கறிஞர்,புவனகிரி, கடலுார் மாவட்டத்தில்இருந்து அனுப்பிய,'இ - மெயில்' கடிதம்: பொது இடங்களில், ரவுடிகள் மற்றும் மது போதையில் உள்ளோர், காவல் துறையினர் மீதே கொலைவெறி தாக்குதல் நடத்துகின்றனர்; அவமரியாதை செய்கின்றனர். அதற்கு, சமீபத்திய உதாரணம், சென்னையில்ஒரு கள்ளக்காதல் ஜோடி, காவலர் ஒருவரிடம் கண்ணியக்குறைவாக நடந்து கொண்டது! காவல் துறையினருக்கேபாதுகாப்பும், மரியாதையும் இல்லை எனும் போது, பொதுமக்களுக்கு எவ்வாறு பாதுகாப்பு அளிப்பர்?சமீபத்தில், பள்ளி வளாகத்திற்குள், ஓர் ஆசிரியை படுகொலை செய்யப்பட்டார். பள்ளி பாதுகாப்பு வளையத்திற்குள்இருந்தால், குற்றவாளி அவ்வளவு எளிதாக வந்து, இச்செயலை அரங்கேற்றி இருக்க முடியுமா? பெரும்பாலான அரசு பள்ளிகளில், மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப, ஆசிரியர்கள் இல்லை. விளையாட்டு ஆசிரியர்கள், வாட்ச்மேன் கிடையாது. சுற்றுச்சுவர் கூட இல்லை எனும்போது, ஆசிரியர் - மாணவர்களுக்கு அரசு எப்படி பாதுகாப்பு அளிக்கும்?இனியும், இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க வேண்டும் என்றால், தமிழக கல்வித்துறை, ஒவ்வொரு அரசு பள்ளிக்கும் சுற்றுச்சுவர் அமைத்து, முழுநேரப் பணியாளராக வாட்ச்மேன் நியமிக்க வேண்டும். பணி நேரத்தில், தலைமை ஆசிரியரையோ, பிற ஆசிரியர்களையோ அல்லது மாணவர்களையோ பார்க்க வருவோரை, தலைமை ஆசிரியர் அனுமதி பெற்ற பின்பே, உள்ளே அனுமதிக்க வேண்டும். பள்ளியைச் சுற்றி,'சிசிடிவி' கேமராக்கள்பொருத்தப்பட வேண்டும். அப்போதுதான், ஆசிரியர்கள், மாணவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்; ஆசிரியை ரமணி படுகொலையே கடைசியாகவும் இருக்கும்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Sathyanarayanan Sathyasekaren
நவ 30, 2024 20:43

வழக்கம் போல திருட்டு திராவிட கொத்தடிமைகள் வைகுண்டேஸ்வரன், சம்பத் கேவலமான கருத்தை எடுத்து வைத்துள்ளனர். அதானியிடம் திருட்டு திராவிட கோபாலபுர குடும்பம் வாங்கிய லஞ்சத்தை மறைக்க, மக்களை திசை திருப்ப பழைய விடியோவை இப்போது வெளியிட்டது ஏன் என்பது எங்களுக்கு தெரியும்.


Anantharaman Srinivasan
நவ 30, 2024 20:38

அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடைபிடிப்பானென்று ஒரு பழமொழியுண்டு. கருணாநிதி காமராஜர் ராஜாஜி நேரு போன்ற சுதந்திரகால தலைவர்களுடன் ஒப்பிட்டு பார்க்க கூடிய நிலையிலில்லை. எனவே எத்தனை தெருக்கள் கட்டிடங்கள் பார்க்குகளுக்கு பெயர்வைத்தாலும் ஆசையடங்காது.


Sudarsan Ragavendran
நவ 30, 2024 11:43

அவங்க இருந்ததாலதான் அப்போ வெளிய வரல இப்போ தைரியமா வெளிய விட்டு இருக்காங்கன்னா என்ன அர்த்தம் நடவடிக்கை எதுவும் இருக்காது சட்ட பாதுகாப்பு அதிகமா கிடைக்கும். தர்மமிட்ட மனங்கள் புண்ணாக விடுமா இந்த மாதிரி அரசு


வைகுண்டேஸ்வரன்
நவ 30, 2024 10:14

கலைவாணி : இசைவாணி யை ஏன் கைது செய்யவில்லை என்று 2019 ல் ஆட்சியாளராக இருந்த இ பி எஸ் மற்றும் பாஜக வைக் கேளுங்க. ஏன்னா, இந்த பாடல் 2019 ல் வெளிவந்தது.


Sampath Kumar
நவ 30, 2024 08:25

காலத்தை வேல கல்வெட்டு அவசியம் அப்போதான் யார் வென்றது என் ஏதற்காக என்று வரும் சந்ததியினருக்கு காலம் பதில் ள்ள ஏதுவாகும் அது சரி கல்வெட்டுகளை அளிப்பதும் திருத்தி ஏழுவதும் அய்யோக்கிய கும்பலுக்கு இது எல்லாம் புரிய வாய்ப்பில்லை


Barakat Ali
நவ 30, 2024 08:04

வாசகர்களின் அனைத்துக் கடிதங்களுமே சிறப்பு ....... வாக்காளர்கள் அனைவருக்கும் இப்படி விழிப்புணர்வு ஏற்பட்டால் தீயவர்கள் ஆட்சிக்கு வரமுடியாது .......


VENKATASUBRAMANIAN
நவ 30, 2024 07:02

ராஜாஜி காமராஜர் எல்லாம் தலைவர்கள். கருணாநிதி போன்றவர்கள் தலைவர்கள் இல்லை. குடும்பத்திற்கு சொத்து சேர்த்தவர்கள். திராவிட கும்பல் இப்படித்தான். மக்கள் என்று புரிந்து கொள்வார்களோ


kantharvan
டிச 13, 2024 16:53

ராஜாஜி காமராஜர் சாதீயத் தலைவர்கள் .. கருனா நிதி சமூக நீதி தலைவர் அவ்வளவுதான்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை