உள்ளூர் செய்திகள்

இதே நாளில் அன்று

செப்டம்பர் 26, 1926திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில்,விடுதலை போராட்ட தியாகி வடிவேல்பிள்ளையின் மகனாக, 1926ல் இதே நாளில் பிறந்தவர் விஜயபாஸ்கரன். இவர், தாராபுரத்தில் பள்ளிக்கல்வியைமுடித்து, சிதம்பரம் அண்ணாமலை பல்கலையில் சேர்ந்தார். அங்கு, அகில இந்திய மாணவர் பெருமன்றத்தின் செயலரானார்; இதனால், அங்கிருந்து நீக்கப்பட்டார்.இவர், 'தினத்தந்தி, நவ இந்தியா, ஹனுமான், அணில், சக்தி, சமரன், விடிவெள்ளி' ஆகியபத்திரிகைகளின் துணை ஆசிரியராகவும், 'சோவியத்நாடு' பத்திரிகையின் இணை ஆசிரியராகவும் பணியாற்றினார்.'சரஸ்வதி' என்ற இலக்கிய இதழை துவக்கி, ஜெயகாந்தன், ஜி.நாகராஜன், சுந்தர ராமசாமி உள்ளிட்ட எழுத்தாளர்களை எழுத வைத்து பிரபலமாக்கினார். கம்யூனிச சிந்தனையாளர் என்பதால், சீன போரின் போது கைது செய்யப்பட்டார். அப்போது, 'சரஸ்வதி' இதழும், நடத்த முடியாமல் நின்றது. இவர், 2011, பிப்., 9ல் தன், 85வது வயதில் மறைந்தார். நவீன இலக்கியத்துக்கும், பாரம்பரிய கருத்துக் களுக்கும் பாலமான பத்திரிகையாளர் பிறந்த தினம் இன்று!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி