உள்ளூர் செய்திகள்

இதே நாளில் அன்று

ஆகஸ்ட் 20, 2014கர்நாடக மாநிலம், பெல்லுாரில்,பள்ளி ஆசிரியரான கிருஷ்ணமாச்சாரி- சேஷம்மா தம்பதிக்கு மகனாக 1918 டிசம்பர் 14ல் பிறந்தவர், பெல்லுார் கிருஷ்ணமாச்சாரி சுந்தரராஜ அய்யங்கார் எனும், பி.கே.எஸ். அய்யங்கார்.இவர் சிறுவனாக இருந்த போது, இன்புளூயன்சா வைரஸ் தொற்றால் டைபாய்டு, மலேரியா, காசநோய் உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டார். பெங்களூரில் இருந்த தன் மாமா திருமலை கிருஷ்ணமாச்சார்யாவிடம் யோகா, ஆசனங்கள் கற்று, தன் உடல்நிலையை மேம்படுத்தினார். அவர், இவரை புனேவிற்கு யோகா கற்பிக்க அனுப்பினார்.ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி, ஜெயபிரகாஷ் நாராயணன்,சச்சின் டெண்டுல்கர், கரீனா கபூர் உள்ளிட்டோருக்கு யோகா கற்பித்து, அவரவர் துறைகளில் ஜெயிக்க காரணமானார். தன், 90வது வயதிலும், மூன்று மணி நேரம் ஆசனங்கள், யோகா செய்தார். 'பத்மஸ்ரீ, பத்ம பூஷண், பத்ம விபூஷண்' உள்ளிட்ட விருதுகளை பெற்றுள்ள இவர், 2014ல் தன் 95வது வயதில் இதே நாளில் மறைந்தார்.'அய்யங்கார் யோகா'வின் நிறுவனர் மறைந்த தினம் இன்று!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை