உள்ளூர் செய்திகள்

இதே நாளில் அன்று

ஜூலை 31, 1951 ஆந்திர மாநிலம், ஸ்ரீகாகுளம் மாவட்டம், அமடலாவலசாவில், 1951ல் இதே நாளில் பிறந்தவர், சத்தியம் பாபு தக்சிதுலு என்ற சரத் பாபு. கல்லுாரி படிப்பை முடித்ததும், போலீஸ் அதிகாரியாக திட்டமிட்டிருந்த இவர், நண்பர்களும், ஆசிரியர்களும், 'நடிகரானால் புகழ் பெறலாம்' என கூறியதை ஏற்று, நடிக்க வாய்ப்பு தேடினார். பத்திரிகை விளம்பரம் பார்த்து, இதி கத காடு என்ற தெலுங்கு படத்தில் அறிமுகமானார்.தமிழில் கே.பாலசந்தரின், பட்டின பிரவேசம்படத்தில் அறிமுகமானார். மகேந்திரன் இயக்கிய, முள்ளும் மலரும் படத்தில் ரஜினியுடன் நடித்து பிரபலமானார். பின், ரஜினியின் நண்பரான இவர், அண்ணாமலை, முத்து, பாபா படங்களில் அவருடன் இணைந்து நடித்தார். நிழல் நிஜமாகிறது, நினைத்தாலே இனிக்கும், உதிரிப்பூக்கள், நெற்றிக்கண், சட்டம், ஆளவந்தான்' உள்ளிட்ட படங்களில் குணச்சித்திர, வில்லன் வேடங்களில் நடித்தார். மேலும், 200க்கும் மேற்பட்ட படங்களிலும், பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்த இவர் 2023, மே 22ல் தன் 71வது வயதில் மறைந்தார். தெலுங்கு சினிமாவின், 'ஜமீன்தார்' பிறந்த தினம் இன்று!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை