உள்ளூர் செய்திகள்

இதே நாளில் அன்று

ஆகஸ்ட் 21, 2006பீஹார் மாநிலம், தும்ரான் என்ற கிராமத்தில், பைகாம்பர் கான் - மித்தன்தம்பதியின் மகனாக 1916, மார்ச் 21ல் பிறந்தவர், உஸ்தாத் பிஸ்மில்லா கான்.இவருக்கு, பெற்றோர் கமருதீன் என பெயர் சூட்டினர். இவரை முதலில் கண்ட இவரது தாத்தா, இறைவனின் திருப்பெயரால், 'பிஸ்மில்லாஹ்' என கூறியதால், அதுவே நிலைத்தது.இவரது முன்னோர், காசி விஸ்வநாதர் ஆலயத்திலும், அரண்மனைகளிலும் இசை கலைஞர்களாக இருந்தனர். இவர், தன் 20 வயதில் காசிக்கு சென்று, தன் மாமாவிடம் ஷெனாய் இசையை கற்றார். முதல் இந்திய குடியரசு விழாவில், செங்கோட்டையை நோக்கிய ஊர்வலத்தில், பிரதமர் நேரு உள்ளிட்டோர் வலம் வர, இவர் ஷெனாய் இசை நிகழ்த்தினார்.தினமும் ஐந்து வேளை தொழும் வழக்கமுள்ள இவர், மற்ற மதங்களையும் கடவுளையும் நேசித்தார். பல கோவில்களிலும் வாசித்துள்ளார். 'பத்ம விபூஷண், சங்கீத நாடக அகாடமி, தான்சேன்' உள்ளிட்ட விருதுகளை பெற்ற இவர், 2006ல் தன், 90வது வயதில், இதே நாளில் மறைந்தார். இவரது நினைவு தினம் இன்று!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை