மேலும் செய்திகள்
ஆர்ப்பாட்டம்
17-Aug-2024
செப்டம்பர் 6, 1979மதுரை மாவட்டம், உசிலம்பட்டி ஒன்றியம், பாப்பாபட்டியில், காட்டமுத்து ஒச்சாத்தேவர் - செவனம்மாள் தம்பதியின் மகனாக, 1923, ஏப்ரல் 4ல் பிறந்தவர் மூக்கையா தேவர். பாப்பாபட்டி, உசிலம்பட்டியில் பள்ளி படிப்பையும், மதுரையில் கல்லுாரி படிப்பையும் முடித்தார். கல்லுாரியில் மாணவர் மன்ற செயலராகவும் செயல்பட்டார். பார்வர்ட் பிளாக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, அக்கட்சியில் சேர்ந்தார்.சுதந்திரத்துக்கு பின், 1952ல் நடந்த முதல்சட்டசபை தேர்தலில், பெரியகுளம் எம்.எல்.ஏ., ஆனார். அதே தொகுதியில் இருந்து, 1957, 1962, 1967, 1977ம் ஆண்டு தேர்தல்களில் வெற்றி பெற்றார். 1967ல், தற்காலிக சபாநாயகராக இருந்து, அண்ணாதுரை, நெடுஞ்செழியன், கருணாநிதி உள்ளிட்டோருக்கு எம்.எல்.ஏ.,வாக பதவி பிரமாணம் செய்து வைத்தார்.கடந்த 1971ல் நடந்த தேர்தலில் பெரியகுளம் எம்.எல்.ஏ., மற்றும் ராமநாதபுரம் எம்.பி.,யாக ஒரே சமயத்தில் வெற்றி பெற்றார். பின், எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்தார். உசிலம்பட்டி, மேநீலிதநல்லுார், கமுதியில் முத்துராமலிங்க தேவர் கல்லுாரிகளை நிறுவிய இவர், 1979ல் தன், 56வது வயதில் இதே நாளில் மறைந்தார். இவரது நினைவு தினம் இன்று!
17-Aug-2024