உள்ளூர் செய்திகள்

இதே நாளில் அன்று

செப்டம்பர் 12, 1912மஹாராஷ்டிரா மாநிலம், மும்பையில்,ஜஹாங்கீர் பரிடூன் - ரட்டிமை ஹட்டா தம்பதியின் மகனாக, 1912ல், இதே நாளில் பிறந்தவர் பெரோஸ் காந்தி. இவர் அலஹாபாத் உயர்நிலைப் பள்ளி, ஈவிங் கிறிஸ்துவ கல்லுாரி, லண்டன் ஸ்கூல் ஆப் எகனாமிக்ஸ் ஆகியவற்றில் படித்தார். இவர் படித்த கல்லுாரிக்குவெளியே, 'வானர் சேனா' அமைப்பின் சார்பில், விடுதலை போராட்டம் நடந்தது. அதில் பங்கேற்ற நேருவின் மனைவி கமலா உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். அவருக்கு உதவிய இவரும், படிப்பை கைவிட்டு, விடுதலை போரில் ஈடுபட்டார். நேரு சிறையில் இருந்தபோது, காச நோயால் பாதிக்கப்பட்ட கமலாவை கவனித்துக் கொண்டார். நேருவின்மகள் இந்திரா, இவரை காதலித்து மணந்தார். இருவரும், 'வெள்ளையனே வெளியேறு' போராட்டத்தில் பங்கேற்று சிறை சென்றனர்.சுதந்திரத்துக்கு பின், ரேபரேலி தொகுதி எம்.பி.,யானார். 'நேஷனல் ஹெரால்ட்' பத்திரிகையின் நிர்வாக ஆசிரியரானார். ஊழல் செய்த அமைச்சர்கள் குறித்து தன், 'நவ் ஜீவன்' பத்திரிகைகளில் எழுதி, நேரு கோபத்துக்கு ஆளான இவர், 1960, செப்., 8ல் தன், 48வது வயதில் திடீர் மாரடைப்பால் காலமானார்.'காந்தி' எனும் பெயரை இந்திரா குடும்பத்திற்கு தந்தவர் பிறந்த தினம் இன்று!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ