உள்ளூர் செய்திகள்

இதே நாளில் அன்று

பிப்ரவரி 25, 1897நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யத்தில், அப்பாக்குட்டி பிள்ளை - தங்கம் தம்பதியின் மகனாக, 1897ல் இதே நாளில் பிறந்தவர் வேதரத்தினம் பிள்ளை.சிறு வயதிலேயே காந்தியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டார். வெளிநாட்டுத் துணிகளை புறக்கணித்து, கதராடை உடுத்தினார். ராஜாஜியுடன் வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகத்தில் பங்கேற்றார். இதனால், பல மடங்கு அபராதம் விதிக்கப்பட்டு, சொத்துக்கள் பறிக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். பலரிடம் நன்கொடை பெற்று, ஏழை பெண்கள் தங்கி, உணவருந்தும் வகையில், 'கஸ்துாரிபாய் காந்தி கன்யா குருகுல'த்தை நிறுவினார். சுதந்திரத்துக்கு பின், மூன்று முறை எம்.எல்.ஏ.,வாக இருந்த இவர், தன் சம்பளம் முழுதையும், ராமகிருஷ்ணா மிஷனுக்கு வழங்கினார். தஞ்சை மாவட்ட காங்கிரஸ் தலைவராக, 10 ஆண்டுகள் இருந்த இவர், தன், 64வது வயதில், 1961, ஆகஸ்ட் 24ல், சட்டசபையிலேயே மாரடைப்பால் காலமானார். 'சர்தார்' பட்டம் பெற்ற தியாகி பிறந்த தினம் இன்று!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை