மேலும் செய்திகள்
சொத்து வரி மறு சீராய்வு 2 மாதமாக நிறுத்திவைப்பு
06-Feb-2025
மார்ச் 3, 1940சென்னை உயர் நீதிமன்ற குமாஸ்தாவாக இருந்த, கடம்பி பாலகிருஷ்ணன் - மங்களம்மா தம்பதியின் மகளாக, காஞ்சிபுரத்தில், 1905, செப்டம்பர் 12ல் பிறந்தவர், கடம்பி மீனாட்சி.இளம் வயதிலேயே தந்தையை இழந்து, தாயின் அரவணைப்பில் வளர்ந்தார். மன்னார்குடி, புதுக்கோட்டை, விழுப்புரம், காஞ்சிபுரம் உள்ளிட்ட இடங்களில் உள்ள கோவில்கள், பழைய கட்டடங்களை கண்டு வியந்ததுடன், அவற்றை பற்றி அறியும் ஆவலுடன் வளர்ந்தார். பள்ளிப்படிப்பை முடித்து, சென்னை பெண்கள் கிறிஸ்துவ கல்லுாரியில், பி.ஏ., வரலாறு படித்தார். அதே கல்லுாரியில், முதுகலை படிப்பை முடித்து, 'பல்லவர் ஆட்சியில் அமைச்சும், சமூக வாழ்வும்' என்ற தலைப்பில் ஆய்வு செய்து, முனைவர் ஆனார். வரலாற்று ஆய்வாளர் நீலகண்ட சாஸ்திரி, இவரின் ஆய்வு கட்டுரைகளை தன் தொகுப்புகளுடன் வெளியிட்டார். தமிழகத்தில் நிராகரிக்கப்பட்ட இவரின் திறமையை, பெங்களூரு மகாராணி கல்லுாரியில் துணைப் பேராசிரியராக பணியமர்த்தி அங்கீகரித்தார், அவ்வூர் திவான். இவர், தன், 35வது வயதில், 1940ல் இதே நாளில் மறைந்தார். சென்னை பல்கலையின் முதல் பெண் முனைவர் மறைந்த தினம் இன்று!
06-Feb-2025