உள்ளூர் செய்திகள்

இதே நாளில் அன்று

ஏப்ரல் 29: புதுச்சேரியில், பெரும் வணிகரான கனகசபை – லட்சுமி தம்பதியின் மனகாக, 1891ல் இதே நாளில் பிறந்தவர் கனகசுப்புரத்தினம் எனும் பாரதிதாசன். பிரெஞ்சு மொழி பள்ளியில் படித்த இவர், கல்வே கல்லுாரியில் தமிழ் படித்து, அரசு கல்லுாரி தமிழாசிரியர் ஆனார். இவரது கவிதையை படித்த பாரதியார், ‘சுதேசமித்திரன்’ இதழில் வெளியிட உதவினார். அவருடன் நெருங்கி பழகியவர், தன் பெயரை, ‘பாரதிதாசன்’ என மாற்றிக் கொண்டார். ‘புதுவை முரசு, குயில், குறள் மலர்’ உள்ளிட்ட பத்திரிகைகளில், பல புனைப் பெயர்களில் எழுதினார். ஈ.வெ.ரா.,வின் கருத்துகளால் ஈர்க்கப்பட்டு, திராவிட இயக்கத்தில் சேர்ந்து, புதுச்சேரியில் எம்.எல்.ஏ., ஆனார். முன்னாள் முதல்வர் அண்ணாதுரையால், ‘புரட்சிக்கவி’ என பாராட்டப்பட்ட இவர், ‘பிசிராந்தையார்’ நாவலுக்காக, சாகித்ய அகாடமி விருது பெற்றார். ‘அழகின் சிரிப்பு, இருண்ட வீடு, சேர தாண்டவம், பாண்டியன் பரிசு, தமிழச்சியின் கத்தி’ உள்ளிட்ட நுால்களை எழுதிய இவர், பல திரைப்படங்களுக்கு வசனமும் எழுதினார். புரட்சிக் கவிஞர் என்று அழைக்கப்பட்ட இவர், தன், 73வது வயதில், 1964 ஏப்ரல் 21ல் மறைந்தார். இவரது பிறந்த தினம் இன்று!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை