உள்ளூர் செய்திகள்

இதே நாளில் அன்று

அக்டோபர் 4, 1998திருநெல்வேலி மாவட்டம், களக்காடுஅருகில் உள்ள சாலை நயினார் பள்ளிவாசல் எனும் கிராமத்தில் ராமய்யா - அன்னலட்சுமி தம்பதிக்கு மகனாக, 1930 செப்., 6ல் பிறந்தவர் சாலை இளந்திரையன் எனும் மகாலிங்கம்.களக்காடு, டோணாவூர், பாளையங்கோட்டையில்பள்ளி படிப்பையும், சென்னையில் பச்சையப்பன்,மாநிலக் கல்லுாரி, சென்னை பல்கலையில் பட்ட படிப்புகளையும் முடித்தார். 'பிரசண்ட விகடன், தமிழ்ப்பொழில்' உள்ளிட்ட இதழ்களில் கவிதை, கட்டுரை, கதைகளை, 'சாலை இளந்திரையன்' எனும் புனைப் பெயரில் எழுதினார்.சென்னை மாநிலக் கல்லுாரி, டில்லி பல்கலையில்தமிழ்த் துறை பேராசிரியராக பணியாற்றினார். மத்தியதகவல் ஒலிபரப்பு துறையில் மொழிபெயர்ப்பாளராக பணியாற்றினார்.இந்திய பல்கலை தமிழாசிரியர் மன்றத்தை உருவாக்கினார். 'எழுத்துச் சீர்மை மாநாடு, வளர்தமிழ்மாநாடு' உள்ளிட்டவற்றை நடத்திய இவர், 1998ல்,தன், 68வது வயதில் இதே நாளில் காலமானார்.தன் வயதை விட, அதிக ஆய்வு நுால்களை எழுதிய தமிழாய்வாளரின் நினைவு தினம் இன்று!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !