இதே நாளில் அன்று
அக்டோபர் 5, 1946மதுரையில், கோவிந்தன் - பொன்னம்மாள் தம்பதியின் மகனாக,1946ல் இதே நாளில் பிறந்தவர் கேசவன். இவர், மதுரையில் பள்ளி படிப்பு முடித்து, தியாகராஜர் கல்லுாரியில்படித்தார். 'சுப்பிரமணிய பாரதியார் படைப்புகளில் அரசியல் பின்னணி' என்ற தலைப்பில் ஆய்வு செய்து, முனைவர் பட்டம் பெற்றார்.சென்னை தலைமை செயலகத்தில் மொழிபெயர்ப்பாளராக பணியாற்றினார். திருச்சி, புதுக்கோட்டை அரசு கல்லுாரிகளில் தமிழாசிரியராகபணியாற்றினார். பாரதியாரின் ஆவணத் தொகுப்பை ஆங்கிலத்திலும், பிரிட்டிஷ் ஆய்வாளர்ஜார்ஜ் தாம்சனின் நுாலை, 'மனித சமூக சாரம்' என்ற தலைப்பில் தமிழிலும் மொழிபெயர்த்தார்.தத்துவம், மதம், அறிவியல், சட்டம், பண்பாடு,கலை உள்ளிட்ட துறைகளில் ஆய்வு கட்டுரைகள் எழுதினார். பாரதிதாசன் பல்கலை பாடத்திட்ட குழு உறுப்பினராகவும், தமிழக அரசின் சிறந்த நுால் பரிசுக்கான தேர்வுக்குழு உறுப்பினராகவும் செயல்பட்ட இவர், 1998, செப்டம்பர் 16ல் தன் 52வது வயதில் மறைந்தார். இவரது பிறந்த தினம் இன்று!