உள்ளூர் செய்திகள்

இதே நாளில் அன்று

- அக்., 7, 1920 -தேனி மாவட்டம், பெரியகுளத்தில், சுப்பராயலு - சீதாலட்சுமி தம்பதிக்கு மகனாக, 1920ல், இதே நாளில் பிறந்தவர் முடியரசன் எனும் துரைராசு.இவர், பெரியகுளம், வேந்தன்பட்டி பள்ளிகளில் படித்த பின், மேலை சிவபுரி கல்லுாரியில், 'வித்வான்' படிப்பை முடித்தார். இவர், சென்னை, முத்தியால்பேட்டை, காரைக்குடி உயர்நிலைப்பள்ளிகளில் தமிழாசிரியராக பணியாற்றினார். மதுரை பல்கலையின் நாடக காப்பிய புலத்தில் பணியாற்றினார். கவிஞர் பாரதிதாசனுடன் நெருங்கிப்பழகி, பகுத்தறிவு சிந்தனை கருத்துகளில் கவிதைகளை எழுதினார். தானும், தன் குழந்தைகளுக்கும், ஜாதி மறுப்பு திருமணம் செய்தார். 'காவியப்பாவை, கவியரங்கில் முடியரசன், நெஞ்சு பொறுக்கவில்லையே, மனிதனை தேடுகிறேன், தமிழ் முழக்கம், ஞாயிறும் திங்களும், நெஞ்சிற் பூத்தவை' உள்ளிட்ட கவிதை நுால்களை வெளியிட்டார். இவரின் கவிதைகள், பல்கலை பாடங்களாக உள்ளன. கட்டுரை, காப்பியம், சிறுகதை, கடிதம், இலக்கணம் உள்ளிட்ட தலைப்புகளில், 25க்கும் மேற்பட்ட நுால்களை எழுதி உள்ளார். 'வீரகாவியம்' நுாலுக்காக, தமிழக அரசு பரிசை பெற்றார். எழுத்தாகவே வாழ்ந்த இவர், தன், 78வது வயதில், 1998, டிசம்பர் 3ல் மறைந்தார்.'சாகித்ய அகாடமி'யால், ஹிந்தி, ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட பல கவிதைகளுக்கு சொந்தக்காரரான, 'வானம்பாடி கவிஞர்' பிறந்த தினம் இன்று!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி