உள்ளூர் செய்திகள்

இதே நாளில் அன்று

அக்டோபர் 13, 1956விருதுநகர் மாவட்டம், மண்மலைமேடு கிராமத்தில், பெரிய கருப்பசாமி - வள்ளியம்மை தம்பதியின் மகனாக, 1895ல் பிறந்தவர் சங்கரலிங்கம்.இவர், விருதுநகரில் காமராஜர் படித்த பள்ளியில் படித்தார். காங்கிரசில் சேர்ந்து, காந்தியுடன் தண்டி யாத்திரையில் ஈடுபட்ட இவர், ராஜாஜி உள்ளிட்ட தலைவர்களுடன் நெருங்கிப் பழகினார். சுதந்திரத்துக்குப் பின், பொட்டி ஸ்ரீராமுலு என்பவர், சென்னை உள்ளிட்ட தமிழக பகுதிகளைஆந்திராவுக்கு வழங்கக்கோரி உண்ணாவிரதம் இருந்தார். அதை எதிர்த்தும், தமிழக பகுதிகளை வரையறுத்தும், ம.பொ.சி., உள்ளிட்ட தலைவர்கள்போராடினர்.அதே கருத்துடைய சங்கரலிங்கமும், 'சென்னை மாகாணத்துக்கு தமிழ்நாடு என, பெயர் சூட்ட வேண்டும், மதுவிலக்கை அமல்படுத்தவேண்டும்' என்பது உள்ளிட்ட, 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, 1956 ஜூலை, 27ல் விருதுநகரில் உண்ணாவிரதம் துவக்கினார். 76 நாட்கள் உறுதியாக உண்ணாவிரதம் இருந்த இவர், கோரிக்கை நிறைவேறாத நிலையில், 1956ல் தன், 61வது வயதில் இதே நாளில் உயிரிழந்தார். 'தமிழ்நாடு'க்காக உயிர்நீத்த தியாகி சங்கரலிங்கனார் மறைந்த தினம் இன்று!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை