உள்ளூர் செய்திகள்

இதே நாளில் அன்று

நவம்பர் 9, 1940ஆந்திர நெசவாளர் பரம்பரையில் வந்த நாராயணசாமி செட்டியாரின் மகனாக, காஞ்சிபுரத்தில், 1940ல் இதே நாளில் பிறந்தவர் குப்புசாமி செட்டியார்.இவர், சென்னை தி.நகர் விவேகானந்தா வித்யாலயா பள்ளியில் படித்தார். தன் 12வது வயதில் தந்தையை இழந்ததால், குடும்ப நிறுவனமான, 'நல்லி' சில்க்ஸ் நிர்வாகியானார். வாஷிங்டன் பல்கலையில் வணிக மேலாண்மையையும், தன் சித்தப்பாவிடம் தொழில் நுணுக்கங்களையும் கற்று, 'நல்லி' குழும தலைவரானார். மத்திய பட்டு வாரியம், இந்தோ - ஆஸ்திரேலியா,இந்தோ - ஜப்பான் வர்த்தக சபைகளின் உறுப்பினரான இவர், சிறந்த கலை ரசிகர் மற்றும் வாசகர். சென்னையின் பல சபாக்களில் தலைவராக இருந்து, கலைகள், சிற்றிதழ்கள், தமிழ் அமைப்புகள்வளர்ச்சிக்கு தாராளமாக நிதியுதவி செய்கிறார்.'வெற்றியின் வரலாறு, நிர்வாக சிந்தனைகள், அனுபவம் பேசுகிறது' உள்ளிட்ட 60 நுால்களை எழுதியுள்ளார். தமிழக அரசின், 'கலைமாமணி' மத்திய அரசின், 'பத்மஸ்ரீ' உள்ளிட்ட விருதுகளை பெற்றுள்ளார்.இவரது, 85வது பிறந்த தினம் இன்று!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ