இதே நாளில் அன்று
நவம்பர் 23, 1926ஆந்திர மாநிலம், புட்டபர்த்தி கிராமத்தில், பெத்தவெங்கட் ராயூ - ஈஸ்வரம்மா தம்பதியின் மகனாக, 1926ல், இதே நாளில் பிறந்தவர் சத்தியநாராயண ராயூ.இவர், சிறு வயதிலேயேஆன்மிகத்தில் அதீத நாட்டத்துடன் வளர்ந்தார். இவரது, 14வது வயதில் தேள் கொட்டி, சில நாட்கள் சுயநினைவை இழந்திருந்த இவர், நினைவு திரும்பிய பின், தனக்குள் வித்தியாச மாற்றங்களை உணர்ந்தார்.எந்த முன் அனுபவமும் இல்லாத நிலையில், சமஸ்கிருத ஸ்லோகங்களை பாடுவதிலும், நீண்ட நேரம் ஆன்மிக உரையாற்றுவதிலும் ஈடுபட்ட இவர், ஷீரடி சாய்பாபாவின் மறு அவதாரமாக தன்னை அறிவித்தார்.புட்டபர்த்தியில் ஆசிரமம், மருத்துவமனைகள் கட்டி, மருத்துவம் மற்றும் தன் மந்திர சக்தியால் நோயாளிகளை குணப்படுத்தினார்; இதனால், இவருக்கு உலகம் முழுதும் பக்தர்கள் உருவாகினர்.பல நாடுகளில் பள்ளி, கல்லுாரிகளை இலவச மாக நடத்தியவர், 'சத்திய சாய் சேவா சமிதி' என்ற அறக்கட்டளை வாயிலாக, சென்னைக்கு, கிருஷ்ணா நதி நீர் கிடைக்க வழி செய்த இவர், 2011, ஏப்., 24ல் தன் 84வது வயதில் சித்தி அடைந்தார்.பக்தர்களால், 'சத்திய சாய்' என வணங்கப்படும்ஆன்மிக குருவின் பிறந்த தினம் இன்று!