உள்ளூர் செய்திகள்

இதே நாளில் அன்று

டிசம்பர் 5, 1930தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகில் செண்டாங்காடு கிராமத்தில், 1930ல் இதே நாளில் பிறந்தவர் எஸ்.டி.சோமசுந்தரம்.இவர், பட்டுக்கோட்டையில் பள்ளி படிப்பையும், சிதம்பரம் அண்ணாமலை பல்கலையில் இன்ஜினியரிங் படிப்பையும் முடித்தார். பள்ளி பருவத்திலேயே, மாணவர் தி.க., என்ற அமைப்பை துவக்கினார். அண்ணாமலை பல்கலையில் அண்ணாதுரையை பேச வைத்து, அவரின், 'ஹோம் லேண்ட்' பத்திரிகைக்காக, அச்சு இயந்திரம் வாங்க நிதி வசூலித்து தந்தார்.தி.மு.க., உருவானபோது அதில் இணைந்தார். தஞ்சை தொகுதியில், காங்., வேட்பாளர் ஆர்.வெங்கட்ராமனை தோற்கடித்து, தி.மு.க.,வின் முதல் எம்.பி.,யானார். முதல்வர் அண்ணாதுரையிடம்போர் நிதியாக, தன் திருமண அன்பளிப்பில் கிடைத்த மனைவியின் நகைகளை தந்தார்.அ.தி.மு.க.,வை எம்.ஜி.ஆர்., துவக்கியபோது அதில் இணைந்தார். எம்.ஜி.ஆர்., - ஜெ., ஆட்சியில் அமைச்சராக இருந்தார். எட்டாவது உலகத்தமிழ் மாநாட்டுக்கு பொறுப்பேற்ற இவர், 2001 டிசம்பர் 6ல் தன் 71வது வயதில் மறைந்தார்.ஜெயலலிதாவால், 'அண்ணா' என அழைக்கப்பட்ட, எஸ்.டி.எஸ்., பிறந்த தினம் இன்று!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ