உள்ளூர் செய்திகள்

இதே நாளில் அன்று

ஜனவரி 2, 1960

கோவையில், 1882 ஆகஸ்ட் 15ல், பிறந்தவர் சி.ஆர்.நாராயண் ராவ்.இவர், சென்னை கிறிஸ்துவக் கல்லுாரியில் விலங்கியல் துறையின்தலைவர் ஹென்டர்சனின் கீழ் முதுகலை படிப்பை தங்கப் பதக்கத்துடன் முடித்தார். பின், ஆசிரியர் பயிற்சி பெற்று, கோவை, எர்ணாகுளம், பெங்களூரு மத்திய கல்லுாரியில் பேராசிரியராக பணியாற்றினார்.பல்கலைக் கல்வியுடன், ஆய்வுகளை ஒருங்கிணைத்தார். இவர், சர் மார்ட்டின், ஆன்ஸ்லோ போஸ்டர் உள்ளிட்டோருடன் இணைந்து, 'கரன்ட் சயின்ஸ்' என்ற இதழை நடத்தியதுடன், அதன் முதன்மை ஆசிரியராகவும் பணியாற்றினார்.இந்திய அறிவியல் அகாடமி அமையக் காரணமானஇவர், தவளைகளின் வகைப்பாடு குறித்த ஆய்வில்நிபுணராகி, புதிய தவளை இனங்களுக்கு பெயர் சூட்டினார்.இவரது தலைமையில், 1938ல், லாகூரில் நடந்த இந்திய அறிவியல் மாநாட்டில் பங்கேற்ற ஜேம்ஸ் பீட்டர் ஹில் என்ற அறிஞர், இவரது, ஸ்லெண்டர் லோரிஸ் இனத்தின் கருப்பை ஆராய்ச்சிக் கட்டுரையை வியந்ததுடன், அதை, லண்டனின் ராயல் சொசைட்டியின் ஆய்விற்காக வழங்கினார்.இவர், 1960ல் தன் 77வது வயதில் இதே நாளில் மறைந்தார். சி.ஆர்.என்.,ராவ் மறைந்த தினம் இன்று!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை