உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இதே நாளில் அன்று / இதே நாளில் அன்று: நவ. 5

இதே நாளில் அன்று: நவ. 5

நவம்பர் 5: திருநெல்வேலியில், காந்திமதிநாத பிள்ளை – மீனாட்சியம்மை தம்பதியின் மகனாக, 1888ல் இதே நாளில் பிறந்தவர், காந்திமதிநாத சுப்பிரமணிய பிள்ளை எனும் கா.சு.பிள்ளை. திருநெல்வேலியில் தொடக்க கல்வி பயின்றார். சென்னை மாநில கல்லுாரியில் பி.ஏ., தமிழ், ஆங்கில இலக்கியங்களில் முதுகலை பட்டங்களும், சட்டத்தில் பி.எல்., – எம்.எல்., பட்டங்களும் பெற்றார். சென்னை சட்ட கல்லுாரி விரிவுரையாளராக, 1919ல் பணியை தொடங்கினார். தமிழ் இலக்கிய வரலாறு, சைவ சித்தாந்தம் துறைகளில் ஆய்வுகள் செய்தார். சிதம்பரம் அண்ணாமலை பல்கலையில் தமிழ் பேராசிரியராகவும் பணியாற்றினார். 1934ல் தொடங்கப்பட்ட சென்னை மாகாண தமிழ் சங்கத்தின் தலைவராக இருந்தார். 1940ல், ‘பல்கலை புலவர்’ பட்டம் பெற்றார். தமிழ், மலையாளம், ஆங்கிலம் மற்றும் வட மொழிகளில் புலமை பெற்று, தமிழ் இலக்கிய வரலாறு, சைவ சித்தாந்த வரலாறு மற்றும் பல்வேறு ஆன்மிக, வரலாற்று நுால்களை எழுதி வெளியிட்டு, தமிழுக்கு பெரும் தொண்டாற்றினார். இன்றும் தமிழறிஞர்களால் போற்றப்படும் இவர், தன் 56வது வயதில் 1945, ஏப்ரல் 30ல் மறைந்தார். இவரது பிறந்த தினம் இன்று!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ