உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இதே நாளில் அன்று / இதே நாளில் அன்று: நவ. 11

இதே நாளில் அன்று: நவ. 11

நவம்பர் 11: பிரபல எழுத்தாளர் மற்றும் மணிமேகலை பிரசுரத்தின் நிறுவனரான தமிழ்வாணன் – மணிமேகலை தம்பதியின் இளைய மகனாக, 1955ல் இதே நாளில் பிறந்தவர், ரவி தமிழ்வாணன். சென்னை லயோலா கல்லுாரியில் பி.காம்., முடித்து, சி.ஏ., படித்துக் கொண்டிருந்தார். 1977ல் தந்தை தமிழ்வாணனின் திடீர் மறைவால், தணிக்கையாளர் படிப்பை கைவிட்டு, தன் 21 வயதில் மணிமேகலை பிரசுரத்தின் நிர்வாக பொறுப்பை ஏற்றார். தன் அண்ணன் லேனா தமிழ்வாணன் துணை யுடன், மணிமேகலை பிரசுரத்தை முன்னணி நிறுவனமாக மாற்றினார். ‘எழுத்தாளர் -– பதிப்பாளர் திட்டம்’ மூலம், தமிழகம் மட்டுமின்றி உலகெங்கிலும் உள்ள 5,000-க்கும் மேற்பட்ட புதிய மற்றும் வளர்ந்து வரும் தமிழ் எழுத்தாளர்களை அறிமுகம் செய்து, 12 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட புத்தகங்களை வெளியிட்டு சாதனை படைத்துள்ளார். உலக நாடுகள் பலவற்றுக்கும் பயணம் செய்து, தமிழ் புத்தக கண்காட்சிகளை நடத்தி, தமிழ் மொழியையும், இலக்கியங்களையும் பரப்பி வருகிறார். இவருக்கு, அமெரிக்காவில் உள்ள உலகத் தமிழ் பல்கலைக்கழகம் முனைவர் பட்டம் வழங்கி சிறப்பித்துள்ளது. உலகத் தமிழர்கள் இல்லங்களில் நுாலகங்களை உருவாக்கிய பெருமைக்குரிய இவருக்கு இன்று, 71வது பிறந்த தினம்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ