உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இதே நாளில் அன்று / இதே நாளில் அன்று: நவ. 21

இதே நாளில் அன்று: நவ. 21

நவம்பர் 21, 1970 திருச்சியில், பேராசிரியர் சந்திரசேகர அய்யர் – பார்வதி அம்மாள் தம்பதியின் மகனாக, 1888, நவம்பர் 7ல் பிறந்தவர் சந்திரசேகர வெங்கட ராமன். இளம் வயதிலேயே கல்வியில் சிறந்து விளங்கிய இவர், சென்னை மாநில கல்லுாரியில் இயற்பியலில் இளங்கலை, முதுகலை பட்டங்களை பெற்றார். மாணவராக இருந்தபோதே ஒளிச்சிதறல் குறித்த ஆய்வு கட்டுரையை சர்வதேச அறிவியல் இதழில் வெளியிட்டார். 1917ல் கொல்கட்டா பல்கலையில் இயற்பியல் பேராசிரியரானார். ஒளி ஒரு பொருளின் வழியாக சிதறும்போது அதன் அலைநீளத்தில் ஏற்படும் மாற்றத்தை 1928, பிப்., 28ல் கண்டறிந்தார். இது, ‘ராமன் விளைவு’ என அழைக்கப்படுகிறது. பிரிட்டிஷ் அரசு வழங்கிய கவுரவ பட்டத்தால், சர் சி.வி.ராமன் என்று அழைக்கப்பட்டார். 1930ல் நோபல் பரிசு பெற்று, அறிவியலுக்கான நோபல் பரிசு பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றார். இந்திய அறிவியல் கழகத்தின் இயக்குநராக பணியாற்றியதுடன், 1934ல் இந்திய அறிவியல் அகாடமியை தொடங்கினார். 1948ல் பெங்களூரில் ராமன் ஆராய்ச்சி நிறுவனத்தை நிறுவினார். பாரத ரத்னா விருது பெற்ற இவர், 1970ல் இதே நாளில், தன் 82வது வயதில் காலமானார். இவரது நினைவு தினம் இன்று!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ