மேலும் செய்திகள்
ஒரே மேடையில் 3 தலைமுறை புல்லாங்குழல் இசை கச்சேரி
14-Oct-2026
இதே நாளில் அன்று
19-Sep-2026
அக்டோபர் 18: கோவையை அடுத்த பல்லடத்தில், சமஸ்கிருத பண்டிதரான வெங்கோபாச்சாரியார் –--- அலமேலு தம்பதியின் மகனாக, 1882ல் இதே நாளில் பிறந்தவர், சஞ்சீவ ராவ். சிறு வயதிலேயே இசை மீது ஆர்வம் கொண்டு, பிரபல புல்லாங்குழல் வித்வான் சரப சாஸ்திரியிடம் சீடராக சேர்ந்து இசை கற்றார். குருவின் மறைவுக்கு பின், அவரது புல்லாங்குழல் பாணியை பின்பற்றி, இசை உலகில் தனி முத்திரை பதித்தார். கர்நாடக இசையில், புல்லாங்குழலை முதன்மை கச்சேரி வாத்தியமாக உயர்த்திய இவர், புல்லாங்குழல் துளைகளில் விரல் வைக்கும் நுட்பமான முறைகளை மேம்படுத்தி, இனிமையாக இசைப்பதில் முன்னோடியாக விளங்கினார். பல, ‘கிராமபோன்’ இசைத்தட்டுகளை வெளியிட்டு, ரசிகர்களை ஈர்த்தார். இவரது, ‘சேதுலரா’ கீர்த்தனை வாசிப்பு, திருவையாறு தியாகராஜர் ஆராதனையில், புல்லாங்குழல் கலைஞர்களால் இன்றும் வாசிக்கப்படுகிறது. சங்கீத கலாநிதி, சங்கீத கலாசிகாமணி உள்ளிட்ட விருதுகளை பெற்ற இவர், தென் மாநிலங்களின், ‘வேணுகான சிகாமணி’ என்றும் போற்றப்பட்டார். புல்லாங்குழல் கலையை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்த்ததுடன், தமிழ் இசை உலகிற்கும் பெருமை சேர்த்த இவர், தன் 79-வது வயதில், 1962, ஜூலை 11ல் காலமானார். இவரது பிறந்த தினம் இன்று!
14-Oct-2026
19-Sep-2026