மேலும் செய்திகள்
இதே நாளில் அன்று: அக். 8
08-Oct-2026
அக்டோபர் 23, 2022 துாத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே ராமச்சந்திராபுரத்தில், பாலசுப்பிரமணியன் – வெள்ளையம்மாள் தம்பதியின் மகனாக, 1941, டிசம்பர் 7ல் பிறந்தவர், பா.ஜெயப்பிரகாசம். உள்ளூர் மற்றும் மதுரையில் பள்ளி படிப்பை முடித்த இவர், மதுரை தியாகராஜர் கல்லுாரியில் தமிழில் முதுகலை பட்டம் பெற்றார். ஆரம்ப காலத்தில் தீவிர மார்க்சிய கொள்கையுடன் பொது வாழ்வில் இயங்கிய இவர், 1965ல் ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்று, தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைதாகி சிறை சென்றார். 1971ல், ‘குற்றம்’ என்ற சிறுகதை வாயிலாக எழுத்தாளர் ஆனார். -சிறை அனுபவங்களும், எளிய மக்களின் துயரங்களும் இவரது எழுத்துகளுக்கு அசல் தன்மையையும், அனலையும் அளித்தன. சிறுகதை, நாவல், கட்டுரை என பல தளங்களில் இயங்கிய இவரது, ‘துாரத்து இடிமுழக்கம், காட்டுமல்லி’ உள்ளிட்ட படைப்புகள் வாசகர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. கரிசல் மண் மக்களின் வாழ்வியலையும், சமூக அவலங்களையும் சிறுகதைகளில் பதிவு செய்தார். தமிழ் இலக்கியத்தின் தவிர்க்க முடியாத ஆளுமையாக விளங்கிய இவர், தன் 81வது வயதில், 2022ல் இதே நாளில் காலமானார். அவரது விருப்பப்படி, உடல் மருத்துவ கல்லுாரிக்கு தானமாக வழங்கப்பட்டது. இவரது நினைவு தினம் இன்று!
08-Oct-2026