உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இதே நாளில் அன்று / இதே நாளில் அன்று: அக். 25

இதே நாளில் அன்று: அக். 25

அக்டோபர் 25, 1912 மதுரையில், எம்.எஸ்.ராமசுவாமி அய்யர் – சுப்புலட்சுமி தம்பதியின் மகனாக, 1912ல் இதே நாளில் பிறந்தவர், சுப்பிரமணியன் எனும் மணி அய்யர். பள்ளி படிப்பை தொடராமல் கர்நாடக இசை மீது நாட்டம் கொண்ட இவர், 9 வயதில் ராஜம் பாகவதரிடம் இசை பயின்று, அரிகேசநல்லுார் முத்தையா பாகவதரிடம் பயிற்சி பெற்றார். கர்நாடக இசையில் தனித்துவமான குரல், எளிமையான பாணி, கற்பனை ஸ்வரங்கள், ராக ஆலாபனையில் சிறந்து விளங்கினார். அபூர்வமான ராகங்களையும் எளிய முறையில் பாடி, பாமரர்கள், பண்டிதர்களை ஒருசேர ஈர்த்த இவர், ஆங்கில இலக் கியம், நாடகக் கலையிலும் ஈடுபாடு கொண்டிருந்தார். அயர்லாந்து நாட்டின் புகழ் பெற்ற நாடக ஆசிரிய ரான பெர்னாட் ஷாவின் எழுத்துகள், பிரிட்டன் காமெடி நடிகர் சார்லி சாப்ளின் மீதான ஈர்ப்பு காரணமாக, ஆங்கில நுால்களை தேடித்தேடி படித்து ஆங்கிலத் திலும் புலமை பெற்றிருந்தார். தமிழிலக்கிய ஆளுமை களுடனும் நெருங்கிய தொடர்பில் இருந்தார். ‘கான கலாதரர், சங்கீத கலாநிதி, ஜனாதிபதி விருது, இசை பேரறிஞர்’ உள்ளிட்ட விருதுகளை பெற்று, புகழ் பெற்ற கர்நாடக இசை கலைஞர்களில் ஒருவராக விளங்கிய இவர், தன் 55வது வயதில், 1968 ஜூன் 8ல் மறைந்தார். இவரது பிறந்த தினம் இன்று!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை