உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இதே நாளில் அன்று / இதே நாளில் அன்று: அக். 26

இதே நாளில் அன்று: அக். 26

அக்டோபர் 26, 1890 உத்தர பிரதேச மாநிலம் அலகாபாதில், ஜெய்நாராயண் ஸ்ரீவத்ஸவாவின் மகனாக, 1890-ல் இதே நாளில் பிறந்தவர், கணேஷ் சங்கர் வித்யார்த்தி. ஆரம்ப கல்விக்கு பின், வறுமையால் படிப்பை தொடர முடியாமல் எழுத்தராகவும், ஆசிரியராகவும் பணியாற்றினார். 1913-ல் கான்பூரில், ‘பிரதாப்’ என்ற ஹிந்தி வார இதழை தொடங்கி, அதன் ஆசிரியராக பணியாற்றினார். சுதந்திர போராட்ட வீரராகவும், அச்சமற்ற பத்திரிகையாளராகவும் விளங்கிய இவர், தொழிலாளர்களின் உரிமைகளுக்காகவும், ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராகவும் எழுதி, பல முறை சிறை சென்றார். பகத் சிங், சந்திரசேகர் ஆசாத் உள்ளிட்ட புரட்சியாளர்களுடன் தொடர்பில் இருந்து, அவர்களுக்கு உதவியும், ஊக்கமும் அளித்தார். காங்கிரஸ் கட்சியின் உ.பி., மாநில தலைவராகவும் இருந்தார். இந்திய விடுதலை இயக்கத்திலும், ஒத்துழையாமை இயக்கத்திலும் முக்கிய பங்கு வகித்தார். கடந்த 1931, மார்ச் 25-ல் கான்பூரில் ஏற்பட்ட மத கலவரத்தின்போது, மக்களை காப்பாற்ற முயன்ற இவர், ஒரு கும்பலால் தாக்கப்பட்டு, தன் 40வது வயதில் மறைந்தார். மத நல்லிணக்கத்துக்காக தன்னுயிரை தியாகம் செய்த பத்திரிகையாளரின் பிறந்த தினம் இன்று!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை