உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இதே நாளில் அன்று / இதே நாளில் அன்று: அக். 27

இதே நாளில் அன்று: அக். 27

அக்டோபர் 27: கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம் உழவூர் கிராமத்தில், கொச்செரில் ராமன் வைத்தியர் – பாப்பியம்மா தம்பதியின் மகனாக, 1920ல் இதே நாளில் பிறந்தவர், கே.ஆர்.நாராயணன். வறுமையான குடும்ப சூழலிலும் கல்வி பயின்ற இவர், திருவிதாங்கூர் பல்கலையில் ஆங்கில இலக்கியத்தில் பி.ஏ., – எம்.ஏ., பட்டங்களை பெற்றார். லண்டன் பொருளாதார பள்ளியில் படித்து, பட்டம் பெற்றார். பத்திரிகையாளராக பணியாற்றிய இவர், 1949ல் இந்திய வெளியுறவு பணியில் சேர்ந்து, தாய்லாந்து, துருக்கி, சீனா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இந்திய துாதராக பணியாற்றினார். டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலை துணைவேந்தராகவும், மத்திய அமைச்சராகவும் பொறுப்பு வகித்தார். கடந்த 1992ல், இந்திய துணை ஜனாதிபதியானார். 1997ல் இந்தியாவின் 10வது ஜனாதிபதியாக பொறுப்பேற்று, நாட்டின் உயரிய பதவியை வகித்த முதல் தலித் என்ற வரலாற்று சிறப்பை பெற்றார்; ஜனநாயக நெறிமுறைகளை காப்பதில் உறுதியுடன் செயல்பட்டார். சமூக நீதி மற்றும் சமத்துவத்துக்காக பாடுபட்ட சிறந்த அரசியல் தத்துவவாதியான இவர், 2005, நவம்பர் 9ல், தன் 85வது வயதில் மறைந்தார். இவரது பிறந்த தினம் இன்று!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை