மேலும் செய்திகள்
இதே நாளில் அன்று: அக். 26
26-Oct-2026
அக்டோபர் 31: உத்தர பிரதேச மாநிலம், அலகாபாதில், ஜவஹர்லால் நேரு – கமலா நேரு தம்பதியின் மகளாக, 1917 நவம்பர் 19ல் பிறந்தவர், இந்திரா பிரியதர்ஷினி. மேற்கு வங்கம், ஸ்விட்சர்லாந்து, பிரிட்டனில் பள்ளி மற்றும் கல்லுாரி படிப்பை முடித்தார். காங்கிரஸ் கட்சியில் இணைந்து சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டார். பெரோஸ் காந்தியை மணந்து, ராஜிவ், சஞ்சய் என இரண்டு மகன்களுக்கு தாயானார். 1959ல் காங்கிரஸ் தலைவரானவர், 1966ல் இந்தியாவின் முதல் பெண் பிரதமரானார். 1971ல் இந்தியா – பாகிஸ்தான் போரின்போது நாட்டை வழி நடத்தி, வங்கதேசம் உருவாக வழிவகுத்தார். வங்கிகள் தேசியமயம், பசுமை புரட்சி, அணுகுண்டு வெடிப்பு சோதனை, விண்வெளி ஆராய்ச்சியை ஊக்குவித்தது உள்ளிட்ட இவரது துணிச்சலான நடவடிக்கைகள், நாட்டின் போக்கை மாற்றியமைத்தன. ‘வறுமையை ஒழிப்போம்’ என்ற முழக்கத்தை முன்னெடுத்து, மக்கள் மத்தியில் பெரும் செல்வாக்கு பெற்றார். 1975ல் நாட்டில் அவசர நிலையை அமல்படுத்தியதால், 1977 தேர்தலில் ஆட்சியை பறிகொடுத்தவர், 1980 லோக்சபா தேர்தலில் வென்று மீண்டும் பிரதமரானார். தன் 66வது வயதில், 1984 அக்டோபர் 31ல், தன் பாதுகாவலர்கள் இருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இவரது நினைவு தினம் இன்று!
26-Oct-2026