உள்ளூர் செய்திகள்

 இதே நாளில் அன்று

டிசம்பர் 18: இலங்கையில், யாழ்ப்பாணத்துக்கு அருகில் உள்ள நல்லுாரில், கந்தப் பிள்ளை- - சிவகாமி தம்பதியின் மகனாக, 1822ல் இதே நாளில் பிறந்தவர் ஆறுமுகம் பிள்ளை. தமிழ், சமஸ்கிருதம், ஆங்கில இலக்கண, இலக்கியங்களை கற்றார். பைபிளை தமிழில் மொழி பெயர்த்தார். யாழ்ப்பாணத்தில் அச்சுக்கூடத்தை நிறுவினார். தமிழ் ஓலைச்சுவடிகளை கண்டறிந்து, பிழை நீக்கி பதிப்பித்தார். இவரை பின்பற்றி, சி.வை.தாமோதரம் பிள்ளை, உ.வே.சாமிநாத அய்யர், ச.வையாபுரி பிள்ளை ஆகியோரும் ஓலைச்சுவடிகளை ஆராய்ந்து, பதிப்பிக்கும் பணியில் ஈடுபட்டனர். கடுமையாக இருந்த உரைநடை தமிழை, அனைவருக்கும் புரியும் வகையில் எளிமையாக்கினார். பிரிட்டிஷ் வாக்கிய அமைப்பை பின்பற்றி, தமிழ் உரைநடையில் கால், அரை, நிறுத்தற்குறிகளை அறிமுகம் செய்தார். சிறந்த சொற்பொழிவு, நாவன்மையால் நாவலர் என அழைக்கப்பட்ட இவர், தன் 57வது வயதில், 1879, டிசம்பர் 5ல் மறைந்தார். 'தமிழ் உரைநடையின் தந்தை' பிறந்த தினம் இன்று!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை