உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் / கவுன்சிலரெல்லாம் பூச்சி தான்!

கவுன்சிலரெல்லாம் பூச்சி தான்!

சென்னை மாநகராட்சியின் மணலி மண்டல குழு கூட்டம், தலைவர் ஆறுமுகம் தலைமையில் நடந்தது. இதில், பங்கேற்று பேசிய, 15வது வார்டு தி.மு.க., பெண் கவுன்சிலர் நந்தினி, 'குடிநீர் வாரிய ஊழியர்கள், குறைகள் குறித்து சொன்னால் செவி சாய்ப்பது கிடையாது' எனக் கூறினார்.தொடர்ந்து பேசிய, 22வது வார்டு காங்கிரஸ் கவுன்சிலர் தீர்த்தி, 'கூட்டத்தில் தான் கவுன்சிலர்களை மதிக்கின்றனர். மற்ற நேரங்களில், பணிகள் குறித்து கேட்டால், மதிப்பதே கிடையாது' என, வேதனை தெரிவித்தார்.இதை கேட்டுக் கொண்டிருந்த மூத்த நிருபர் ஒருவர், 'இந்த அதிகாரிங்க, எம்.எல்.ஏ.,க்கள் சொன்னாலே மதிக்கிறது கிடையாது... கவுன்சிலர்களை பூச்சி போல தானே பார்ப்பாங்க...' எனக் கூற, மற்ற நிருபர்கள் வாய் பொத்தி, கமுக்கமாகச் சிரித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

D.Ambujavalli
மார் 01, 2025 06:39

கூட்டத்துக்கு வந்தோமா, tea பிஸ்கட், மிக்ஸ்ச்சர் சாப்பிட்டோமா என்று போகாமல், தங்கள் நிலையைக் கொட்டி அழவா அழைத்தார்கள்?


புதிய வீடியோ