| ADDED : மார் 05, 2025 10:30 PM
வி.சி., கட்சி தலைவர் திருமாவளவன், அரசியலுக்கு வரும்முன் அரசு ஊழியராக இருந்தவர். மதுரை கலெக்டர் அலுவலகம் அருகேயுள்ள தடய அறிவியல் ஆய்வக அலுவலகத்தில் பணியாற்றியபோதே, அரசியலில் ஈடுபட ஆரம்பித்தார். காலப்போக்கில் அரசு பணியை ராஜினாமா செய்துவிட்டு முழுநேர அரசியல்வாதியானார்.சமீபத்தில் சில நிகழ்ச்சிகளுக்காக மதுரை வந்த திருமாவளவன், செல்லும் வழியில் தான் பணியாற்றிய தடய அறிவியல் ஆய்வக அலுவலகத்திற்கு திடீர் 'விசிட்', அடித்தார்.அங்கிருந்த துணை இயக்குநரை பார்த்ததும் திருமாவளவனுக்கு வியப்பு. தன்னுடன் முன்பு பணியாற்றிய காஜா என்பவர் தான் அவர் என தெரிந்ததும், திருமாவளவனின் முகம் மலர்ச்சி அடைந்தது; இருவரும் நலம் விசாரித்துக் கொண்டனர்.அங்கிருந்தவர்களிடம், '35 ஆண்டுகளுக்கு முன் இவருடன் வேலை செய்தேன்' எனக் கூறிய திருமாவளவனை, அலுவலகத்தின் அனைத்து பிரிவுகளுக்கும் காஜா அழைத்துச் சென்று காட்டினார்.உடனிருந்த வி.சி., நிர்வாகி ஒருவர், 'நம்ம அண்ணன் மலரும் நினைவுகள்ல மூழ்கிட்டாருப்பா...' என, 'கமென்ட்' அடிக்க, சக தொண்டர்கள் சிரித்தனர்.