உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் / கண்துடைப்பா இல்லாம இருக்கணுமே!

கண்துடைப்பா இல்லாம இருக்கணுமே!

மதுரையில், 'கன்பெடரேஷன் ஆப் இண்டியன் இண்டஸ்ட்ரீஸ்' எனப்படும் சி.ஐ.ஐ., நடத்திய ஜி.எஸ்.டி., சிறப்பு முகாமில், வரி செலுத்துவோர் சேவைகள் இயக்குநரக இயக்குநர் ஜெனரல், மகேஷ்குமார் ரஸ்தோகி பேசினார். தொழிலதிபர்கள், வர்த்தக சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.ரஸ்தோகி, 'ஜி.எஸ்.டி., தொடர்பாக 'சி.பி.ஐ.சி., இந்தியா' என்ற இணையதளத்திலும், அனைத்து சமூக வலைதள பக்கங்களிலும், நிறைய தகவல்கள் உள்ளன. யாரெல்லாம் எக்ஸ் தளத்தை பயன்படுத்தவில்லை; யாரெல்லாம் 'வாட்ஸாப்' பயன்படுத்துவதில்லை...' எனக் கேட்டார். ஒரு தொழிலதிபர், 'தகவல் கேட்டால் பதில் தரும் வகையில், சமூக வலைதள பக்கங்களை மாற்றுங்கள். ஒரே வித வரி விதியுங்கள்' என்றார். பொறுமையாக பேசிய ரஸ்தோகி, 'அதற்காக தான் இதுபோன்ற சிறப்பு ஜி.எஸ்.டி., முகாம்கள் நடத்துகிறோம். உங்களது குறைகளை தெரியப்படுத்துங்கள்' என்றதும், 'கண் துடைப்பான முகாமாக இல்லாமல் இருந்தால் சரி' என, தொழிலதிபர்கள் முணுமுணுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை