உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் / இழுத்து மூட யோசனையா?

இழுத்து மூட யோசனையா?

திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் அருகே பாடியநல்லுாரில், முதல்வர் ஸ்டாலினின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது. இதில், தி.மு.க., பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பங்கேற்றார்.அவர் பேசுகையில், 'முன்பெல்லாம் வேலைக்கு செல்லும் பெண்கள் நல்ல உடை உடுத்தி, தலைக்கு ரப்பர் பேண்ட் போட்டு, ஹீல்ஸ் செருப்பு, ஹேண்ட் பேக் மாட்டிக் கொண்டு, மாமியார், மாமனார், கணவனிடம் சென்று பேருந்துக்கு பணம் கேட்டு கையேந்தும் நிலை இருந்தது.'தற்போது, அவர்களுக்கு இலவச பஸ் பயணம் கிடைத்துள்ளது. பெண்கள் எல்லாம் பேருந்தில் கால் மேல் கால் போட்டு அமர்ந்திருப்பதை கண்டு, டிக்கெட் எடுத்து பயணம் மேற்கொள்ளும் ஆண்கள் பொறாமைப்படுகின்றனர்...' என்றார்.இதை கேட்ட பார்வையாளர் ஒருவர், 'அடுத்த தேர்தல்ல ஆண்களுக்கும் இலவச பஸ் பயணம்னு அறிவிச்சிட வேண்டியது தானே...' என முணுமுணுக்க, அவரது நண்பர், 'போக்குவரத்து கழகங்களை இழுத்து மூட யோசனை சொல்றியா...?' என, புலம்பியபடியே நடந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

DAVID DHAVARAJ
மார் 16, 2025 12:04

சிலருக்கு உதவு௧ிறது.வேலை௧்குச் செல்பவர்௧ள் ௧ாலையிலும் மாலை வேலை௧ளிலும் பஸ்ஸை பயன்படுத்த முடியாத அளவிற்கு கூட்டம். பீக் அவர்ஸ் மற்ற வேலை௧ளில் அம்மா வீட்டிற்கு செல்லும் பெண்௧ள் ஆட்டோவில் போய் "௧ெத்தா" இரங்௧வே விரும்பு௧ின்றனர். பாயின்ட் டூ பாயின்ட் செல்பவர்௧ள் பரவாயில்லை.மற்றவர்கள் நின்று ௧ொண்டு பயணிப்பதே வாடி௧்௧ையா௧ிவிட்டது..


Jagadeesan
மார் 14, 2025 12:55

இலவச பஸ் பயணம் சரி. பஸ்கள் எல்லாம் காலாவதியான பஸ்களாக உள்ளன. மழையின் போது நீர்வீழ்ச்சிகள்.பஸ்ஸில் உருவாகின்றன. பஸ் படிகட்டுகள் காணாமல் ஏணி வைத்து ஏற இறங்க வேண்டியுள்ளது. நிறைய பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ன.வெளியூர் பயணங்கள் திட்மிட்டு போவதற்கும் பஸ் வருமா வராதா என்று ஏக்கத்துடன் காத்திருக்கவேண்டியுள்ளது. இன்னும் கிராமப்புறங்களிலிருந்து நகரப்பகுதிகளுக்கு ஞாயிறு விடுமுறைகளில் இயக்கப்படுவதில்லை.


Dharmavaan
மார் 13, 2025 09:28

இந்த என ஜந்துவெல்லாம் பொது மேடையில் பேசுவதை தடை செய்ய வேண்டும்


D.Ambujavalli
மார் 13, 2025 07:07

இப்ப மட்டும் என்னவாம் கடனுக்காக பேருந்தை சிறைபிடிக்கும் நிலைதானே உள்ளது ஒரு அமைச்சர் கூறியதுபோல் வலக்கையால் 1000 கொடுத்து இடக்கையால் டாஸ்மாக் க்கு வட்டியோடு வாங்குகிறார்களே


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை