உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் / ஏ.ஐ.,யால கற்று தர முடியாது!

ஏ.ஐ.,யால கற்று தர முடியாது!

துாத்துக்குடியில் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் கவுன்சிலர்களுக்கு, ஏ.ஐ., எனும் செயற்கை நுண்ணறிவு திறன் பயிற்சியை, தொகுதி தி.மு.க., - எம்.பி., கனிமொழி துவக்கி வைத்தார். தொடர்ந்து அவர் பேசும்போது, 'ஏ.ஐ., தொழில்நுட்பம், தற்போதைய காலகட்டத்திற்கு அனைவருக்கும் தேவையானதாக உள்ளது. பல்வேறு தகவல்களை இதன் மூலம் அறிந்து, பின்னர் ஒரு முடிவை எடுக்க இந்த தொழில்நுட்பம் உதவுகிறது. 'முன்னாள் முதல்வர் கருணாநிதி, ஒரு ஏ.ஐ., போன்றவர். ஏனென்றால் அவர் பலரின் கருத்துகளை கேட்டு, பின்னர் ஒரு முடிவை எடுப்பார். அதேநேரம், எத்தனை தொழில்நுட்பங்கள் வந்தாலும், மனித அறிவுக்கு இணையாகவே முடியாது. மனிதனின் முடிவு தான் இறுதியானது...' என்றார். இதை கேட்ட நிருபர் ஒருவர், 'இவங்க சொல்றது சரி தான்... கண்காணிப்பு கேமராவுக்கு தெரியாம லஞ்சம் வாங்குற வித்தையை, மனிதனுக்கு எந்த ஏ.ஐ.,யாலும் கற்று தரவே முடியாது...' என முணுமுணுக்க, சக நிருபர்கள் சத்தமின்றி சிரித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

D.Ambujavalli
செப் 19, 2025 18:44

Ai பயிற்சி மையத்தில், மனித மூளைக்கு இணையில்லை என்றபின், அதைவிட வலிமை குறைந்த technology எதற்கு என்று கேட்க யாருக்கும் துணிவு இல்லை போலிருக்கிறது


sankar
செப் 19, 2025 13:20

விஞ்ஞானக பூர்வ ஊழலில் நம்பர் ஒன்னு ஆச்சே


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை