மேலும் செய்திகள்
ஊரக வளர்ச்சி அலுவலர்கள் உள்ளிருப்பு போராட்டம்
12-Mar-2025
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கம் சார்பில், பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டம் நடந்தது. சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி ஒன்றிய அலுவலகத்தின் பிரதான நுழைவாயிலில், சேர் போட்டு அலுவலக பணியாளர்கள், ஊராட்சி செயலர்கள் அமர்ந்திருந்தனர்.அப்போது, ஒன்றிய கமிஷனர் கார்த்திகேயன், ஜீப்பில் இருந்து இறங்கி வந்தார். போராட்டத்தில்ஈடுபட்டிருந்தவர்கள் எழுந்து, அவருக்கு வணக்கம் தெரிவித்தனர். பதில் வணக்கம் தெரிவித்தபடி, கமிஷனர் அறைக்கு சென்றார். உடனே, போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பல பெண் அலுவலர்கள், தங்களின் இருக்கைக்கு சென்று விட்டனர்.இதையடுத்து, சங்க நிர்வாகிகள் சென்று, பெண் அலுவலர்களை அழைத்து வந்தனர். சங்க நிர்வாகி ஒருவர் பேசுகையில், 'உள்ளிருப்பு போராட்டம் காலை 10:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை நடக்க வேண்டும். இறுதி வரை போராடினால் தான் வெற்றி கிடைக்கும்' என்றார்.இதை கேட்ட அலுவலர் ஒருவர், 'போராட்டத்துல கலந்துக்கிட்ட மாதிரியும், வேலை செய்ற மாதிரியும் டபுள் ஆக்ட் கொடுக்குறாங்களோ...?' என, 'கமென்ட்' அடிக்க, அங்கு சிரிப்பலை பரவியது.
12-Mar-2025