உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் / சொல்லாம சொல்றாரோ?

சொல்லாம சொல்றாரோ?

திருச்சி லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட புதுக்கோட்டைசட்டசபை தொகுதி வாக்காளர்களுக்கு, திருச்சி தொகுதிம.தி.மு.க., - எம்.பி., துரை வைகோ நன்றி தெரிவித்தார்.அப்போது பேசுகையில், 'ஓட்டளித்த மக்களுக்கு இரண்டு மாதங்களாக நன்றி தெரிவிப்பதோடு, குறைகளையும் கேட்டு வருகிறேன். இதுதான் என் கடைசி நிகழ்ச்சியாக இருக்கும். இனிவரும் காலங்களில், நேரில் மக்களை சந்திக்க வாய்ப்பு இருக்குமா என தெரியவில்லை.'அதனால், எந்த கோரிக்கையாக இருந்தாலும், மனுவாகஎழுதி எம்.பி., அலுவலகத்தில் கொடுத்து விடுங்கள்;முடிந்த வரை கோரிக்கைகளை நிறைவேற்றபாடுபடுவேன்' என்றார்.இதைக் கேட்ட பொதுமக்களில் ஒருவர், 'இனி, அடுத்த தேர்தலுக்கு தான் தொகுதி பக்கம் எட்டி பார்ப்பேன்னு சொல்லாம சொல்றாரோ...' என முணுமுணுத்தபடியே கிளம்பினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

D.Ambujavalli
அக் 27, 2024 19:13

இரண்டு மாதம் ‘நடமாடி’ விட்டேன் இனி என் தரிசனம் காண டில்லிக்கோ, சென்னைக்கோ தான் வர வேண்டும் என செப்புவதுதான் message


சமீபத்திய செய்தி