‘அமைச்சரை கிண்டல் அடிக்கிறாரோ?’
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் தொகுதிக்கு உட்பட்ட குன்றத்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தினமும், 200 பேருக்கு அன்னதானம் வழங்கும் திட்டத்தின் விரிவாக்க விழா சமீபத்தில் நடந்தது. த.வெ.க.,வைச் சேர்ந்த ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ், ஸ்ரீபெரும்புதுார் தொகுதி த.வெ.க., – எம்.எல்.ஏ.,வும், வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சருமான தென்னரசு ஆகியோர் பங்கேற்று துவக்கி வைப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அமைச்சர் ரமேஷ் சரியான நேரத்திற்கு வந்து, பக்தர்களுக்கு உணவு பரிமாறி அன்னதான திட்டத்தை துவக்கி வைத்துவிட்டு, புறப்பட தயாரானார். அப்போது, அமைச்சர் தென்னரசு வரும் தகவல் கிடைக்க, சிறிது நேரம் காத்திருந்தார். தென்னரசு வந்ததும், அவருக்கு பூங்கொத்து கொடுத்த ரமேஷ், ‘வருக வருக’ என சிரித்தபடி வரவேற்றார். இதை பார்த்த தொண்டர்கள், ‘சொந்த தொகுதி விழாவுக்கு தாமதமா வந்த தென்னரசுவை, வருக வருகன்னு அமைச்சர் ரமேஷ் கிண்டல் அடிக்கிறாரோ?’ என, முணுமுணுத்தபடியே கிளம்பினர்.