உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் / முயல் எச்சத்தால் மூச்சு திணறுமா?

முயல் எச்சத்தால் மூச்சு திணறுமா?

சென்னை, திருவொற்றியூர் தனியார் பள்ளியில் இருமுறை விஷவாயு கசிவு ஏற்பட்டு, மாணவியர் பாதிக்கப்பட்டதாக கூறி, மறுஅறிவிப்பு வரும் வரை பள்ளியை மூட உத்தரவிடப்பட்டது. இந்நிலையில், பொதுத்தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்களின் கல்வி பாதிக்கும் என்பதால், பள்ளியை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டி, வருவாய் கோட்டாட்சியர் இப்ராஹிம் தலைமையில், பள்ளி நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடந்தது.இப்ராஹிம் கூறுகையில், 'முதல்முறை வாயு கசிவு ஏற்படவில்லை என, மாசு கட்டுபாட்டு வாரியம் அறிக்கை வெளியிட்டுள்ளது. பள்ளி வளாகத்தில், 35 முயல்கள் வளர்ப்பதாக ஆய்வில் தெரியவந்தது. அதன் எச்சங்களாலும் இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படலாம் என கூறப்படுகிறது. எனவே, அவற்றை அகற்ற உத்தரவிட்டுள்ளேன்' என்றார்.இதை கேட்ட மூத்த நிருபர் ஒருவர், 'முயல் எச்சங்கள் மூச்சை திணற வைக்குமா...' என பிரமிக்க, மற்றொரு நிருபர், 'கரன்ட் கட்டுக்கு அணில் தான் காரணம்னு சொன்ன கதை மாதிரி இருக்கே...' என, 'கமென்ட்' அடித்து சிரித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Barakat Ali
நவ 26, 2024 20:05

திராவிடியா மாடல் ஆட்சியில் காமெடிக்குப் பஞ்சமில்லை ........


D.Ambujavalli
நவ 26, 2024 06:31

இவர்களின் முழுமுதல் தலைவர் காட்டிய வழியே, அப்பாவி ஜந்துக்களான எலி, கறையான், இன்று முரல், நாளை எந்த மிருகமா? இவர்களின் ஊழலை மறைக்க என்றே படைக்கப்பட்ட பழி தாங்கிகள்


D.Ambujavalli
நவ 26, 2024 05:58

அன்று தொட்டு இன்று வரை அப்பாவி ஜந்துக்களான எலி, கரையான், அந்தıல் அ நில்