உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் /  சிரிச்சே மானத்தை வாங்கிடுவாங்க!

 சிரிச்சே மானத்தை வாங்கிடுவாங்க!

திருப்பூர் நகைச்சுவை முற்றம் சார்பில், 'சிரிப்போம், சிந்திப்போம்' நிகழ்ச்சி, ஹார்வி குமாரசாமி திருமண மண்டபத்தில் சமீபத்தில் நடந்தது. இதில், பட்டிமன்ற நடுவர் பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் பேசுகையில், 'நம் வீட்டு பிள்ளைகளிடம், 'எங்க ஆபீஸ் மேனேஜர் வர்றாரு... சிரிக்கக் கூடாது'ன்னு சொல்லுவோம். ஆனா, கரெக்டா மேனேஜர் வர்றப்போ சிரிப்பாய்ங்க பாருங்க. அது மட்டுமில்லாம, சில நேரங்கள்ல நம்மகிட்டயே வந்து, இது தானப்பா அந்த லுாசு மாமான்னு கேட்டுருவாங்க... 'சின்ன பசங்கள சிரிப்ப அடக்க சொல்லி பாருங்க. சிரிப்ப அடக்கி முகம் சிவந்து போகும். அந்த முகம் இன்னும் அழகாக இருக்கும்...' என்றார். இதை கேட்டு, முன்வரிசையில் அமர்ந்திருந்த ஒருவர், 'இவர் சொல்றது நுாத்துக்கு நுாறு உண்மைதான். இந்த கால வாண்டுக கிட்ட மட்டும் சிரிக்கக் கூடாதுன்னு சொல்லி பாருங்க... சிரிச்சு சிரிச்சே நம்ம மானத்தை வாங்கிடுவாங்க...' எனக் கூற, அருகில் இருந்தவர்கள் ஆமோதித்து சிரித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

D.Ambujavalli
மே 15, 2026 06:17

‘மருந்தைக் குடிக்கும்போது குரங்கை நினைக்காதே’ என்று வைத்தியர் சொல்லாமல் இருந்தால் நோயாளி தன் பாட்டுக்கு மருந்தைக் குடித்திருப்பார் அதுபோல பிள்ளைகளிடம் குறிப்பாக ‘சிரிக்காதீங்க’ என்று ஏன் சொல்லவேண்டும், அவர்கள் அடக்கும் முயற்சியில் இறங்க வேண்டும்?


புதிய வீடியோ