உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் / விக் வச்சு யூத்தா மாறிட்டாரோ?

விக் வச்சு யூத்தா மாறிட்டாரோ?

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தொகுதி அ.தி.மு.க.,- - எம்.எல்.ஏ.,வாக, 2011 - 16 வரை இருந்தவர் காமராஜ். இவர், ஜெ., மறைவுக்குப் பின், பன்னீர்செல்வம் அணியில் இணைந்தார். மீண்டும் அ.தி.மு.க.,வில் இணைந்த காமராஜ், 2021 சட்டசபை தேர்தலில், கிருஷ்ணராயபுரம் தொகுதியில், 'சீட்' கிடைக்காத விரக்தியில், தி.மு.க.,வுக்கு தாவினார். வரும் சட்டசபை தேர்தலில், கிருஷ்ணராயபுரம் தொகுதியில் போட்டியிட, அமைச்சர் செந்தில் பாலாஜி வாயிலாக காய் நகர்த்தி வருகிறார். இந்நிலையில், கடந்த சில நாட்களாக காமராஜ், 'விக்' வைத்தபடி தி.மு.க., நிகழ்ச்சி மற்றும் செந்தில் பாலாஜி பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். இதைப் பார்த்த தொண்டர் ஒருவர், 'உதயநிதி இந்த முறை இளைஞர்களுக்கு தான் அதிகமா சீட் கொடுக்கப் போறார்னு தகவல் பரவுறதால, காமராஜும் விக் வச்சு, 'நானும் யூத்து தான்'னு காட்டிக்கிறாரோ...?' என, 'கமென்ட்' அடிக்க, சக தொண்டர்கள் சிரித்தபடியே கலைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை