உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் /  கடிவாளம் இவங்ககிட்ட இருக்கோ?

 கடிவாளம் இவங்ககிட்ட இருக்கோ?

தி.மு.க., முன்னாள் அமைச்சரும், குன்னம் தொகுதி எம்.எல்.ஏ.,வுமான சிவசங்கர், பெரம்பலுாரில் சமீபத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், 'த.வெ.க., ஆட்சி, தி.மு.க., கூட்டணி கட்சியினரின் தயவில் தான் உள்ளது. அரசியல் களம் என்பது இன்று இருப்பது போல் நாளை இருக்காது; நாளை இருப்பது போல் நாளை மறுநாள் இருக்காது; எந்த நேரத்திலும் மாறக்கூடியது. 'தமிழகத்தில், கவர்னர் வாயிலாக பா.ஜ., ஆட்சியை கொண்டு வந்துவிடக் கூடாது என்ற நோக்கில் தான், எங்கள் தோழமை கட்சிகள் த.வெ.க.,வுக்கு ஆதரவு கரம் நீட்டியுள்ளன. விஜய் இதை மறந்து செயல்பட்டால், இந்த ஆட்சி கரைந்து போகும் என்பதை நினைவுபடுத்துகிறேன்' என்றார். இதை கேட்ட நிருபர் ஒருவர், 'ஆட்சி த.வெ.க.,விடம் இருந்தாலும், கடிவாளம் எங்ககிட்ட தான் இருக்குன்னு சொல்றாரோ...?' என முணுமுணுக்க, சக நிருபர்கள் ஆமோதித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி