வாசகர்கள் கருத்துகள் ( 1 )
கூட்டத்துக்கு அழைக்கும்போதே ‘கைதட்ட அலவன்ஸ் ‘ ஏதாவது அறிவித்திருந்தால் கைதட்டல் கிடைத்திருக்குமோ என்னவோ? எல்லாவற்றுக்கும் ஒரு விலை எதிர்பார்ப்பதுதானே அரசியல்
தமிழக தொழிலாளர் நலன், திறன் மேம்பாட்டு துறை சார்பில், ஈரோட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி முன்னிலை வகித்தார்.இதில், தமிழக கட்டுமான தொழிலாளர்கள் நல வாரிய தலைவர் பொன்குமார் பேசுகையில், 'கட்டுமான தொழிலாளர்களுக்காக எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், முதல்வர் ஸ்டாலின், திட்டங்களை அறிவித்துள்ளார். கட்டுமான தொழிலாளர்கள் நிலம் வைத்திருந்தால் வீடு கட்ட நிதி; நிலம் இல்லாதவர்களுக்கு ஆண்டுக்கு, 10,000 குடியிருப்புகள் ஒதுக்கும் திட்டம் அறிவித்து, 3,000 வீடுகளை ஒதுக்கி உள்ளார்' என, பட்டியலிட்டார்.அப்போது ஒருசிலர் மட்டும் கை தட்டியதும் ஆத்திரமான பொன்குமார், 'இத்தனை திட்டங்களை அறிவித்துள்ள முதல்வருக்கு எல்லாரும் கை தட்டக் கூடாதா...' என்றதும் கை தட்டினர்.தொழிலாளர் ஒருவர், 'கை தட்டல் எல்லாம் தானா கிடைக்கணும்; இப்படி கேட்டு வாங்கக் கூடாது...' எனக் கூற, சக தொழிலாளர்கள் ஆமோதித்து சிரித்தனர்.
கூட்டத்துக்கு அழைக்கும்போதே ‘கைதட்ட அலவன்ஸ் ‘ ஏதாவது அறிவித்திருந்தால் கைதட்டல் கிடைத்திருக்குமோ என்னவோ? எல்லாவற்றுக்கும் ஒரு விலை எதிர்பார்ப்பதுதானே அரசியல்