உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் /  முனிவர் போல சாபம் விடுறாரே!

 முனிவர் போல சாபம் விடுறாரே!

துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் சமீபத்தில் தி.மு.க., பொதுக் கூட்டம் நடந்தது. அக்கட்சியின் அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி கலந்து கொண்டார். அவர் பேசுகையில், 'தி.மு.க., ஒரு மாதிரியான கட்சி. இந்த கட்சிக்கு துரோகம் செய்தவனுக்கு கை, கால் இல்லாமல் போய்விடும்; பேச வராது; பைத்தியமாக திரிவான். ராஜாஜி முதல்வராக இருந்தபோது, 'தி.மு.க.,வை மூட்டை பூச்சி போல நசுக்குவேன்' என்றார். ஆனால், அவருக்கு நினைவு மண்டபம் எழுப்பியது, தி.மு.க., தான். 'தி.மு.க.,காரன் கை விரலை வெட்ட வேண்டும்' என, காமராஜர் பேசினார். அவருக்கு சிலை வைத்து அழகு பார்த்தது, தி.மு.க., தான். காமராஜரால் அழிக்க முடியாத தி.மு.க.,வை, நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான்களான த.வெ.க.,வினர் தொட்டு பார்க்க முடியுமா?' என்றார். இதை கேட்ட நிருபர் ஒருவர், 'பகுத்தறிவு பேசும் கட்சியில் இருந்துட்டு, முனிவர் போல சாபம் விடுறாரே' என முணுமுணுக்க, சக நிருபர்கள் ஆமோதித்து சிரித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Anantharaman Srinivasan
ஜூலை 28, 2026 21:23

நேற்று முளைத்த காளான் கட்சி ஆட்சிகட்டிலிருந்து திமுகவை இறக்கி விட்டுட்டாங்களே..?


D.Ambujavalli
ஜூலை 28, 2026 19:19

கட்சியை. விட்டு. அடுத்த. முகாமுக்குப். போனவர்களை. பார்த்து. தானும். போக. முடியவில்லையே. என்ற. ஆதங்கம் இந்த. இரண்டும். கெட்டான் நிலையில் வரும். விரக்திப். பேச்சுதான். இது.


கண்ணன்
ஜூலை 28, 2026 11:43

பாவம், படிப்பறிவற்றவரின்்உளறல்கள்


SIVA
ஜூலை 28, 2026 08:38

வித்தைக்காரன் மாதிரி பேச ஆரம்பிச்சேடீங்க ....


Lakshminarasimhan
ஜூலை 28, 2026 07:58

இவர்களை சிறையில் இட்டு பார்க்குது தவெக ஏனென்றால் இவர்கள் கூட்டணியில் காங்கிரஸ் இருக்கும் தைரியம் தான்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை