வாசகர்கள் கருத்துகள் ( 2 )
பின்னே எலி சூட் கோட்டுடன் சும்மா ஓடுமா ?
தங்கபாலுக்கு வரும் சட்டசபை தேர்தல்ல போட்டியிடும் ஆசை மட்டுமல்ல, கண்டிப்பாக வெற்றி பெறும் தொகுதியாக கிடைக்க வேண்டுமே என்ற ஆதங்கம் .. அதான் தனியாவர்தனம்.
துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் தமிழக காங்., முன்னாள் தலைவர் தங்கபாலு, பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், 'தமிழகத்தை பொறுத்தவரை, தி.மு.க., கூட்டணியில் காங்கிரசுக்கு நெருடல்கள் எதுவும் இல்லை. கொள்கை கூட்டணி யாக இருப்பதால், மக்கள் தொடர்ந்து இக்கூட்டணியை வெற்றி பெற வைக்கின்றனர்; வரும் தேர்தலிலும் வெற்றி பெறுவோம். 'நான்காண்டு கால, தி.மு.க., ஆட்சியின் செயல்பாடு களை மக்கள் பாராட்டுகின்றனர். தமிழகம் எல்லா நிலை களிலும் முன்னேறி உள்ளதற்கான ஆதாரங்களை, மத்திய அரசே தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. இதனால் தான், தமிழக முதல்வர், சிறப்பான முதல்வராக இருக்கிறார் என, சொல்கிறோம்...' என்றார். இதை கேட்ட மூத்த நிருபர் ஒருவர், 'வர்ற சட்டசபை தேர்தல்ல போட்டியிடும் எண்ணம், இவருக்கு இருக்குமோ... தி.மு.க.,வுக்கு இப்படி காவடி துாக்குறாரே...' என முணுமுணுக்க, சக நிருபர்கள் சிரித்தபடியே கலைந்தனர்.
பின்னே எலி சூட் கோட்டுடன் சும்மா ஓடுமா ?
தங்கபாலுக்கு வரும் சட்டசபை தேர்தல்ல போட்டியிடும் ஆசை மட்டுமல்ல, கண்டிப்பாக வெற்றி பெறும் தொகுதியாக கிடைக்க வேண்டுமே என்ற ஆதங்கம் .. அதான் தனியாவர்தனம்.