உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் /  அவர், பாலோ பண்ணியிருக்கணும்!

 அவர், பாலோ பண்ணியிருக்கணும்!

'மத்திய பட்ஜெட்டில், தமிழகத்துக்கு சரியாக நிதி ஒதுக்கீடு செய்யவில்லை' என்ற குற்றச்சாட்டை முன்வைத்து, தி.மு.க., கூட்டணி கட்சிகள் சார்பில், திருப்பூர் ரயில்வே ஸ்டேஷன் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், திருப்பூர் தெற்கு தொகுதி தி.மு.க., - எம்.எல்.ஏ., செல்வராஜ் பேசும் போது, கையில் சில பேப்பர்களை வைத்தபடி, மத்திய அரசு தமிழகத்திற்கு எதையெல்லாம் மறுக்கிறது என்ற பட்டியலை நீளமாக வாசித்து முடித்தார். அதன்பின், கூட்டணி கட்சியின் உள்ளூர் தலைவர்கள் பேச துவங்கினர். அப்போது, எம்.எல்.ஏ., செல்வராஜ் மைக்கில், 'ஒவ்வொருவரும் சுருக்கமாக பேசினீங்கன்னா, கூட்டம் கலையாம இருக்கும்; நீளமா பேசினீங்கன்னா கூட்டம் கலைஞ்சிடும்' என, 'அட்வைஸ்' செய்தார். இதை கேட்ட கூட்டணி கட்சி நிர்வாகி ஒருவர், 'இந்த அறிவுரையை முதல்ல செல்வராஜ், 'பாலோ' பண்ணியிருக்கணும்...' என, முணுமுணுக்க, சக தொண்டர்கள் ஆமோதித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை