உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் / ஹிந்தியை கரைச்சு குடிச்சிருக்காரே!

ஹிந்தியை கரைச்சு குடிச்சிருக்காரே!

சென்னை பூந்தமல்லி ஒன்றியம், காட்டுப்பாக்கம் ஊராட்சியில், சமுதாயக் கூடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. சிறப்பு அழைப்பாளராக பூந்தமல்லி, தி.மு.க., - எம்.எல்.ஏ., கிருஷ்ணசாமி பங்கேற்றார். அப்போது, திருஷ்டி கழித்து பூசணிக்காய் உடைக்க, வடமாநில தொழிலாளர் ஒருவரிடம் கொடுக்கப்பட்டது; ஆனால், அவருக்கு திருஷ்டி கழிக்கும் சாங்கியம் குறித்து தெரியவில்லை.இதை கவனித்த கிருஷ்ணசாமி, 'பூசணிக்காயை இடமிருந்து வலமாக, வலமிருந்து இடமாக என மூன்று முறையும், மேலும் கீழுமாக மூன்று முறையும் சுற்ற வேண்டும்' என, ஹிந்தியில் விளக்கி கூற, தொழிலாளியும் அப்படியே செய்தார்.இதை கவனித்த பார்வையாளர் ஒருவர், 'இவங்க கட்சி தலைமை இருமொழிக் கொள்கையே போதும்னு சொல்லுது... இவர், அதை காதுல வாங்காம, ஹிந்தியை கரைச்சு குடிச்சிருக்காரே... இருமொழிக் கொள்கை எல்லாம் மக்களுக்கு தான்... இவங்களுக்கு இல்ல போலும்...' என, முணுமுணுத்தபடியே நடந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

chandrasekaran p.m.
ஏப் 05, 2025 16:10

இந்தி கூட பகுத்தறிவையும் கரைச்சு குடிச்சிருக்காரு


M Ramachandran
ஏப் 04, 2025 20:20

தீ மு க்கா என்பதை திருடர்கள் கூட்டம் என்றும் கொள்ளலாம்.


Yes your honor
ஏப் 04, 2025 10:58

திமுக தான் தனது வயிற்றுப் பிழைப்பிற்கு இந்தி தொந்தி என்று நொண்டி அடித்துக் கொண்டுள்ளது. தமிழ்நாட்டில் என்னவோ பஸ் கண்டக்டர் முதல் காய்கறி விற்கும் பாட்டிவரை அனைவரும் தோ ரூபியா தொ, தஸ் ரூபியா என்று அழகாக இந்தி பேசிக் கொண்டு தான் இருக்கிறார்கள்.


D.Ambujavalli
ஏப் 04, 2025 06:29

உங்களுக்குத் தேவையானால் ஸ்வாஹிலி கூடக் கற்றுக்கொள்வீர்கள் பொதுஜனம் குண்டு சட்டியில் குதிரை ஒட்டி, உங்கள் காலடியிலேயே கிடக்க ஒரு மொழியே தேவையில்லை என்று கூடக் கூறுவீர்கள்


Anantharaman Srinivasan
ஏப் 04, 2025 00:54

Contract எடுத்தால் வடகத்திகாரனை வைத்தால் தான் குறைந்த கூலி கொடுத்து வேலை வாங்க முடியும். அதற்காக இந்தியை கற்று தேறியிருப்பார்.


முக்கிய வீடியோ