சென்டிமென்டா பேசி சாதிக்கிறாரே!
சேலம், கோட்டை மாரியம்மன் கோவிலுக்கு புதிய மரத்தேர் செய்யப்பட்டு, விரைவில் வெள்ளோட்டம் விடப்பட உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் குறித்து, அனைத்து துறை அதிகாரிகளின் ஆய்வுக் கூட்டம் கோவில் வளாகத்தில் நடந்தது.திருத்தொண்டர் சபை தலைவர் ராதாகிருஷ்ணன் பேசுகையில், 'இங்கு பல்வேறு துறைகளின் அதிகாரிகள் வந்துள்ளீர்கள். ஒரு கோவிலுக்கு புதிதாக தேர் செய்து, அதன் தேரோட்டத்தில் உங்களது பங்களிப்பும் இருக்க வேண்டும் என்பது ஆண்டவனின் கட்டளை.'இதை சிறு குறையும் இன்றி சிறப்பாக நிறைவேற்றினால், உங்களுக்குப் பின் வரும் தலைமுறையினரும், 'இந்த கோவில் தேரோட்டத்தை எங்கள் முன்னோர்கள் முன்னின்று நடத்தினர்' என, பெருமையாக பேசுவர்' என்றார்.இதைக் கேட்ட அதிகாரி ஒருவர், 'ஆண்டவன் கட்டளை, பேரன், பேத்திகள் பெருமைப்படுவர்னு சென்டிமென்டா பேசியே காரியத்தை சாதிக்கிறாரே...' என, 'கமென்ட்' அடிக்க, சக அதிகாரிகள் தலையை ஆட்டினர்.