உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் / நல்லாவே பாடம் நடத்துறார்!

நல்லாவே பாடம் நடத்துறார்!

திருப்பூர், சிக்கண்ணா அரசு கலை கல்லுாரியில், 'பேரிடர், அவசர காலங்களில் முதலுதவி செய்வது எப்படி?' எனும் தலைப்பில், விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.இதில், திருப்பூர் மாவட்ட உதவி தீயணைப்பு அலுவலர் வீரராஜ், மாணவர்கள் மத்தியில் பேசுகையில், 'சமீபத்தில் வெள்ளம் வந்தது உங்களுக்கு நினைவில் இருக்கிறதா? பாலைவன தேசத்தில் வெள்ள சேதம் கேள்விப்பட்டீர்களா?' என, கேள்வி கேட்டார்; மாணவர்களிடம் பதில் இல்லை. உடனே, 'கட்டாயம் பேப்பர் படியுங்கள். வளரும்தலைமுறை, நாட்டு நடப்பு தெரிந்து கல்லுாரிக்கு வாருங்கள். சுற்றுச்சூழல் எப்படி இருக்கிறது என, தினசரி அறிந்து கொள்ளுங்கள். விண்ணில் இருந்து, 140 மீட்டர் நீளமுள்ள கல் விழப் போகுதாம்... அந்த கல்என் தலையில் விழக்கூடாதுன்னு நினைப்பதற்காகவாச்சும் பேப்பர் படியுங்கள்...' என்றார். பேராசிரியர் ஒருவர், 'தீயணைப்பு அதிகாரி நல்லாவே பாடம் நடத்துறார்...' என, முணுமுணுத்தவாறு நடந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

D.Ambujavalli
செப் 22, 2024 18:51

கல் விழுவது கிடக்கட்டும். பெருமழை, புயல், தீ என்று கிளம்பும் நிலைகளை எதிர்நோக்க , மீட்க வழி சொல்லட்டும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை