உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் / எப்படி பொங்கியிருப்பாரு?

எப்படி பொங்கியிருப்பாரு?

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜு, மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது கூறுகையில், 'விஜய் படங்கள் போலவே, அவரது கட்சி மாநாடு துவக்கமும் நன்றாகஉள்ளது; போக போகத் தான் கட்சியின் செயல்பாடுகள் தெரிய வரும். அ.தி.மு.க.,வுடன் கூட்டணி குறித்து முடிச்சு போட வேண்டாம். த.வெ.க., கொள்கைகளை நாங்கள் ஏற்றுக் கொண்டால், நாங்கள் அவர் கட்சியில் சேர்ந்து விடலாமே. கமல் மாதிரி இல்லாமல், மாநாட்டில் விஜய் மிக தெளிவாக பேசினார்.கமல் கட்சி துவங்கும் போது டார்ச் லைட்வைத்திருந்தார். இப்போது டார்ச் லைட் மட்டும்உள்ளது; பேட்டரியை காணோம்' என்றார்.மூத்த நிருபர் ஒருவர், 'விஜய் மட்டும், அ.தி.மு.க.,வை விமர்சித்து பேசி இருந்தா, இவர் எப்படி எல்லாம் பொங்கியிருப்பார்... விஜய், இவங்களைசீண்டாம விட்டதால, மாநாடு சூப்பர்னு சர்டிபிகேட் தர்றாரு...' என, 'கமென்ட்' அடித்து சிரித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Anantharaman Srinivasan
நவ 06, 2024 14:05

கமல் டார்ச் லைட் பேட்டரியை திருடி செல்லுலர் ராஜு விஜய் கட்சிக்கு சார்ஜ் செய்து பின்நாளில் தேவைபட்டால் கூட்டணி சேர துண்டு விரித்து விட்டார்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை