உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் /  எத்தனை இடங்களில் தேறுவோம்!

 எத்தனை இடங்களில் தேறுவோம்!

தமிழக காங்., முன்னாள் தலைவர் தங்கபாலு, துா த்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டத்தில் சமீபத்தில் பேட்டி அளித்தார். அவர் கூறும்போது, 'தமிழகத்தில் எங்கள் கூட்டணி வலிமையான கூட்டணி. கடந்த ஐந்தாண்டுகளில் மிகப்பெரிய மாற்றத்தை தமிழகம் சந்தித்துள்ளது. அ.தி.மு.க., ஆட்சியில் கடைசி இடத்தில் இருந்த தமிழகம், முதன்மை மாநிலமாக தற்போது மாறி இருக்கிறது. 'வளர்ச்சி குறித்தும், முன்னேற்றம் பற்றியும், அ.தி.மு.க., மற்றும் பா.ஜ.,வினர் பேச முடியாது. முதல்வர் வேட்பாளர்களிலேயே முதன்மையானவராக, ஸ்டாலின் திகழ்கிறார். ஓட்டு எண்ணிக்கை முடிவில், எங் கள் கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெறும்' என்றார். இதை கேட்ட காங்., தொண்டர் ஒருவர், 'தி.மு.க., கூட்டணியில் நாம வாங்கிய, 28 சீட்களில், எத்தனை இடங்களில் தேறுவோம்னு தெரியலையே...' என முணுமுணுக்க, சக தொண்டர்கள் ஆமோதித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Anantharaman Srinivasan
ஏப் 26, 2026 19:06

காங்கிரஸ் காரனெல்லாம் திமுக கமிஷன் ஏஜெண்ட்டாக மாறி பல வருடமாகி விட்டது.


D Natarajan
ஏப் 26, 2026 05:15

முட்டை ரெடியாக உள்ளது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை