உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் /  கேசரியையே சேர்க்க முடியலை!

 கேசரியையே சேர்க்க முடியலை!

தேர்தலில் தொடர்ந்து மூன்று முறை வெற்றி பெற்று, நாட்டில் நீண்ட காலம் பிரதமராக இருந்த, காங்கிரஸ் கட்சியின் ஜவஹர்லால் நேருவின் சாதனையை, பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் முறியடித்தார். இதை, நாடு முழுதும் பா.ஜ.,வினர் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். ராமநாதபுரம் வழிவிடு முருகன் கோவிலில், சமீபத்தில் பா.ஜ., நிர்வாகிகள், பிரதமர் பெயரில் அர்ச்சனை செய்து வழிபட்டனர். தொடர்ந்து, பொதுமக்களுக்கு வழங்குவதற்காக கேசரி தயார் செய்து எடுத்து வந்திருந்தனர். ஆனால், அவற்றை பொதுமக்களுக்கு வழங்குவதற்கு பதிலாக, கட்சி நிர்வாகிகளே பகிர்ந்து சாப்பிட்டு விட்டனர். கேசரியை எதிர்பார்த்து, கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்த பக்தர் ஒருவர், 'இந்த கேசரியை கூட மக்களிடம் இவங்களால கொண்டு சேர்க்க முடியல... இதுல, பிரதமரின் சாதனையை எப்படி கொண்டு போய் சேர்க்க போறாங்களோ...?' என கிண்டல் அடிக்க, சக பக்தர்கள் சிரித்தபடியே கிளம்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Anantharaman Srinivasan
ஜூன் 17, 2026 23:02

ஒவ்வொரு பாஜக நிர்வாகியும் என்ன ஐந்தாறு கிலோ கேசரியையா விழுங்கி விட்டனர்.? பொது விநியோகத்திற்கு என்றால் அதற்கு தகுந்த மாதிரி பண்ணி கொண்டுவர வேணௌடாமா..?


R Vijayaraghavan
ஜூன் 17, 2026 16:48

முற்றிலும் உண்மை


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை